பக்கம்:இசைத்தமிழ்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! ió பொருந்தப் பாடுதற்குரிய இசைத் தமிழிலக்கியங்களாக அமைந்துள்ளன. நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிப் பதிகங்களுக்குப் பழந்தமிழ்ப் பண்களும் தாளங்களும் குறிக்கப்பெற்றுள்ளன. ஆயினும் அத்திருப்பதிகங்களைப் பண்ணுடன் பாடும் மரபு இடைக்காலத்தில் மறைந்து போயிற்று. எனினும் இக்காலத்திலும் பண்ணுடன் பாடப் பெற்றுவரும் தேவாரத்திருப்பதிகங்களின் யாப்பமைதியினை யும் இசையமைதியினையும் அடியொற்றி நாலாயிரத்திவ்யப் பிரபந்தத் திருப்பாடல்களையும் பழைய மரபின்படி பண் பொருந்தப்பாடும் முறையினை இயலிசைப் புலவர் துணைக் கொண்டு மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருதல் இசைத்தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்புடையதாகும். திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழிப்பதி கங்கள் மூவர் தேவாரத் திருப்பதிகங்களே யொத்த இய லிசையமைப்புடையனவே. எடுத்துக் காட்டாக ஒரு சில பதிக அமைப்பினை இங்குக் குறிப்பிடலாம். திருமங்கையாழ் வார் அருளிய திருக்குறுந்தாண்டகம் என்பது திருநாவுக் கரசர் அருளிய திருநேரிசைப் பதிகங்களையொத்த இயலிசை யமைப்பினை யுடையதாகும் திருநெடுந்தாண்டகம என்பது தாண்டக வேந்தராகிய திருநாவுக்கரசர் பாடியருளிய திருத்தாண்டகப் பதிகங்களையொத்த இயலிசையமைப்பினைப் பெற்றதாகும். இசைநலம் பொருந்திய மூல இலக்கியங் களாகப் பல இன்னிசைத் திருப்பதிகங்களை அருளியவர் திருஞானசம்பந்தப்பிள்ளையாராவர், இடரினுந் தளரினு மென துறுநோய் தொடரினு முனகழல் தொழுதெழுவேன் கடல் தனி அமுதொடு கலந்த நஞ்சை மிடறினி லடக்கிய வேதியனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/123&oldid=744974" இலிருந்து மீள்விக்கப்பட்டது