பக்கம்:இசைத்தமிழ்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 இதுவோ எமையாளுமா றிவதொன்றெமக்கில்லையேல் அதுவோ வுன தின்னருள் ஆவடு துறையானே. என நாலடிமேல் வைப்பாக ஆளுடைய பிள்ளையார் அருளிய காந்தாரப் பஞ்சமப் பதிகத்தின் இயலிசையமைப்பினை யொத்தமைந்தது, வண்டுணு நறுமல சிண்டைகட்டி பண்டைநம் வினைகெட வென்ற டிமேல் தொண்டரு மமரரும் பணியநின்றங் கண்டமே டகலிட மிளந்தவனே ஆண்டாயுனேக் காண்பதொ ரருளெனக் கருளுதியேல் வேண்டேன்.மனே வாழ்க்கையை விண்ணகர் மேயவனே . எனத் திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழித் திருப்பதிகமாகும். . இதனை 'நாலடிமேல் வைப்பு ஆகப் பதிப்பித்தலும் மேற்குறித்த காந்தார பஞ்சமப் பண்ணமைதி யிற் பாடுதலும் இயலிசையறிஞர் கடனுகும். இவ்வாறே நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தி லமைந்துள்ள திரும் பதிகங்களிற் பெரும்பலான தேவாரத் திருப்பதிகங் களையொத்துப் பாடுதற்கேற்ற இயலிசை யமைப்பினைப் பெற்ற இசைத் தமிழிலக்கியங்களாகத் திகழ்கின்றமை காணலாம். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் திருவாய் மொழிப் பதிகங்களுக்கு மட்டும் பழைய மரபினை யடியொற்றிய பண்ணுந் தாளமுங் குறிக்கப் பெற்றுள்ளன. திருவாய் மொழிப்பண்களையும் அவற்றுக்குப் பிற்காலத்தார் அமைத்துக் கொண்ட இராகங்களையும் பின்வருமாறு அட்டவணைப் படுத்திக் காட்டுவர் யாழ் நூலாசிரியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/124&oldid=744975" இலிருந்து மீள்விக்கப்பட்டது