பக்கம்:இசைத்தமிழ்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{2} புகுந்து இயங்க, அதனல் உளதாகிய ஓசை, கேட்போர் செவிக்கு ஒருவகை இன்பத்தை அளித்தது. அதன் இனிமையை யுணர்ந்த மக்கள், அதுபோன்றதோர் இன் னேசையைத் தாமும் இசைத்து மகிழ விரும்பிச் சிறிய மூங்கிற் கோலே வெட்டி யெடுத்து, அதன்மேற் பல துளை களே அளவு பெறச் செய்து முதன்முதல் அமைத்துக் கொண்ட துளைக்கருவி குழல்’ என்பதாகும். இது புறத்தே வயிரமுடைய புல்வகையாகிய மூங்கிலிற் செய்யப் பெற்ற மையால் வேய்ங்குழல் எனவும் புல்லாங்குழல் எனவும் வழங்கப் பெறுவதாயிற்று. இது முற்காலத்தில் மூங்கிலி லும் சந்தனம், கருங்காலி, செங்காலி என்ற மரங்களிலும் வெண்கலத்திலும் அமைக்கப்பட்டது. மூங்கிலிற் செய்வது உத்தமம், வெண்கலம் மத்திமம், ஏனைய அதமம்என்பர் குழலின் நீளம் இருபது விரல்; சுற்றளவு நாலரை விரல், துளையிடுமிடத்து நெல்லரிசியில் ஒரு பாதி மரன் நிறுத்திக் கடைந்து வெண்கலத்தால் அனேக பண்ணி இடமுகத்தை அடைத்து வலமுகம் வெளியாக விடப்படும். இருபது விரலளவுள்ள இக்குழலில் தூம்பு முகத்தில் இரு விரல் நீக்கி, முதல் வாய்க்கு ஏழங்குலம் விட்டு வளைவாயி லும் இருவிரல் நீக்கி நடுநின்ற ஒன்பது விரலிலும் எட்டுத் துளையிடப்படும். இவற்றுள் வளைவாய் சேர்ந்த ஒரு துளையை முத்திரை என்று கழித்து மற்றைய ஏழு துளைகளி லும் ஏழு விரல் வைத்து ஊதப்படும். இத்துளைகளின் இடைப்பரப்பு ஒரு விரலகலம் கொள்ளப்படும். இடக்கையிற் பெருவிரலும் சிறுவிரலும் நீக்கி மற்றை மூன்று விரல்களும் வலக்கையிற் பெருவிரல் நீங்கிய ஏனை நான்கு விரல்களும் வைத்து இக்குழலே வாசித்தல் வேண்டும். மேற்குறித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/131&oldid=744980" இலிருந்து மீள்விக்கப்பட்டது