பக்கம்:இசைத்தமிழ்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 ஆயனுெருவன் ஆநிரைகளையும் எருமையினங்களையும் மேய்க்குந் தொழிலில் ஈடுபட்டுள்ளான். மாலைப்பொழு தாகவே அவற்றையெல்லாம் ஒன்று திரட்டி அழைத்துச் செல்லும் கடமை அவனுக்கேற்பட்டது. ஒளி மங்கிய அந்தி நேரத்தில் புதர்களிடையே சென்று புல்மேயும் எருமை யொன்றை அவன் காணவில்லை. எனினும் இடை யிடையே அவ்வெருமையின் கனைப்பொலி மட்டும் அவன் செவியிற் படுகிறது. அவ்வொலியினைக் கேட்ட ஆயன், தன் கையிலிருந்த வேய்ங்குழலை எடுத்து ஊதி இனிய இசையைத் தோற்றுவித்தான். அவ்வின்னிசையினுல் ஈர்க்கப்பட்டு அச்சாரலில் மேயும் எருமை முதலிய எல்லா மாடுகளும் ஒன்றுசேர்ந்து அவனையடைகின்றன. உள்ளத் திற்கு உவகையளிக்கும் இவ்வினிய காட்சியை, "எனத்தோ ரூழி யடியார் ஏத்த இமையோர் பெருமானர் நினைத்துத் தொழுவார் பாவந்திர்க்கும் நிமலர் உறை கோயில் கனத்த மேதி காணு தாயன் கைமேற் குழலூத அனைத்துஞ் சென்று திரளுஞ் சாரல் அண்ணுமலேயாரே' எனவரும் திருப்பாடலில் ஆளுடைய பிள்ளையார் வனப்புற எடுத்துக்காட்டிய திறம் உணர்ந்து மகிழத்தக்கதாகும்: இதல்ை விலங்குகளில் மந்த மதியுடைய தெனப்படும் எருமையையும் தம்பால் ஈர்த்து நிறுத்தும் முறையில் முல்லே நிலத்தில் வாழும் ஆயர் வேய்ங்குழலால் இனிய இசை யினை வளர்த்தார்கள் என்ற செய்தி நன்கு புலளுதல் காணலாம். - - யாழ் பண் வகைகளே யாழின் பகுதி எனவும் இசை நூலை 'நரம்பின் மறை எனவும் ஆசிரியர் தொல்காப்பியர்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/133&oldid=744982" இலிருந்து மீள்விக்கப்பட்டது