பக்கம்:இசைத்தமிழ்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6 இதன்கண் ஏழிசைகளுள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நரம்பாக ஏழு நரம்புகள் கட்டப்பெற்றிருந்தன. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்கச் செய் யுட்களில் தமிழ் முன்னேர் இசைத்த யழைய யாழ்க்கருவி யின் உருவச்சாயலும் அதன் உறுப்புக்களாகிய பத்தர், போர்வைத் தோல், கோடு, ஆணி, திவவு, நரம்பின் தொடர்ச்சி, உந்தி, கவைக்கடை என்பவற்றின் அமைப்பும் வினை, பயன், மெய், உரு என்னும் நால்வகை உவமங்களின் துணை கொண்டு நன்கு விளங்கப்பெற்றுள்ளன. பண்டை நாளில் வழங்கிய நரம்புக்கருவியாகிய யாழ் என்பது, மருப்பு என்னும் கோடாகிய உறுப்பு வளையப் பெற்றதாய்க் கண்ணினுற் காண்டற்கு அத்துணை அழகில்லாத தோற்றத் துடன் செவியாற்கேட்டு மகிழ்தற்கு இனிய இசைநலங் களைத் தோற்றுவிக்கும் சிறப்புடையதாய் விளங்கியது. இந் நுட்பம், 'கணேகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன வினேபடு பாலாற் கொளல்’ (279) எனவரும் திருக்குறளுக்கு, "அம்பு வடிவாற் செவ்விதாயி னும் செயலாற்கொடிது. யாழ் கோட்டால் வளைந்ததா யினும் செயலாற் செவ்விது. அவ்வகையே தவஞ் செய் வோரையும் கொடியர், செவ்வியர் என்பது வடிவாற் கொள்ளாது அவர் செயல்பட்ட கூற்ருனே அறிந்து கொள்க’ எனப் பரிமேலழகர் கூறிய உரையாலும், "யாழிடைப் பிறவா இசையேயென்கோ’ (மனையறம்-76) எனவரும் சிலப்பதிகாரத் தொடர்க்கு யாழ் கட்கு (கண் ணுக்கு) இன்னதாகலின் அதனிடைப் பிறவாத இசையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/136&oldid=744985" இலிருந்து மீள்விக்கப்பட்டது