பக்கம்:இசைத்தமிழ்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 குறிப்புக்களையும் அமராவதி கோலி என்னும் இடங்களிற் கிடைத்த யாழ்க்கருவியின் உருவச்சாயலையும். தாராசுரம், திருஎருக்கத்தம்புலியூர் ஆகிய ஊர்களில் உள்ள திருநீல கண்டயாழ்ப்பாணர் திருவுருவத்தில் அமைந்த சகோடயாழ்க் கருவியின் உருவ அமைப்பினையும் கூர்ந்து நோக்குவார்க்கு யாழும் வீணையும் இருவேறு கருவிகள் என்பது இனிது விளங்கும் பண்டைத் தமிழர் வாசித்த யாழ்க்கருவி பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என நால் வகைப்படும் எனவும், இவை நாலும் பெரும்பான்மைய. சிறுபான்மையான் வருவன பிறவுமுள எனவும் கூறுவர் அடியார்க்கு நல்லார். 'பேரியாழ் பின்னு மகரஞ் சகோடமுடன் சீர்பொலியுஞ் செங்கோடு செப்பினர்-தார்பொலிந்து மன்னுந்திருமார்ப வண்கூடற் கோமானே பின்னு முளவே பிற" என்பது அவருரையில் வரும் மேற்கோட் செய்யுளாகும். இவற்றுள் பேரியாழிற்கு இருபத்தொரு நரம்பும் மகர யாழிற்குப் பத்தொன்பதும் சகோடயாழிற்குப் பதிலுைம் செங்கோட்டி யாழுக்கு ஏழும் கொள்ளப்படும். இவ்வுண்மை, 'ஒன்று மிருபதும் ஒன்பதும் பத்துடனே நின்ற பதின்ை கும் பின்னேழும் - குன்ருத நால்வகை யாழிற்கு நன்ன ரம்பு சொன்முறையே மேல் வகை நூலோர் விதி ’’ எனவரும் சிலப்பதிகார உரை மேற்கோளால் இனிது புலனும். யாழ்நரம்பிற்குக் குழலிசை கொண்டு பண்டையோர் இசை கூட்டினர் என்பது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/139&oldid=744988" இலிருந்து மீள்விக்கப்பட்டது