பக்கம்:இசைத்தமிழ்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 நரம்பின் திங் குரல் நிறுக்குங் குழல்போல் ’ எனவரும் பாலைக்கலித் தொடரால் இனிது விளங்கும். கடைச்சங்க காலத்திலும் அதற்கு முன்னும் பாடப் பெற்ற சான்ருேர் செய்யுட்களினுள்ளே வில்யாழ், சீறியாழ், பேரியாழ் என்னும் யாழ் வடிவங்களே குறிக்கப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் ஈரேழ் தொடுத்த செம்முறைக்கேள்வி எனப் பதின்ைகு நரம்புடைய சகோட யாழின் இயல்பு விளக்கப்பெற்றது. 'வணர்கோட்டுச் சீறியாழ்' என நடுகற்காதையிலும் செந்திறம் புரிந்த செங்கோட்டியாழ்' எனப் புறஞ்சேரியிறுத்த காதையிலும் வருந் தொடர்களைக் கூர்ந்து நோக்குங்கால் சீறியாழ், செங்கோட்டியாழ் இரண்டும் இருவேறு யாழ்கள் என்பது புலகுைம். ஆயிரம் நரம்புடைய யாழ்க்கருவி தமிழகத்தில் முற்காலத்தில் வழக்கிலிருந்தது என்பது, 'ஆயிர நரம்பிற் ருதி யாழாகும்’ என நூலுள்ளும், 'தலமுதலுழியிற் ருனவர் தருக்கறப் புலமக ளாளர் புரிநரப்பாயிரம் வலிபெறத் தொடுத்த வாக்கமை பேரியாழ்' எனப் பெருங்கதையிலும் குறிக்கப்பெறுதலாற் புலம்ை. 'பெருங்கலம் என்பது பேரியாழ்; அது கோட்டினதளவு பன்னிருசாணும் வணரளவுசாணும் பத்தரளவு பன்னிரு சானும், இப்பெற்றிக்கேற்ற ஆணிகளும் திவவும் உந்தி யும் பெற்று ஆயிரங்கோல் தொடுத்தியல்வது” எனவரும் அடியார்க்கு நல்லார் உரைப்பகுதி,ஆயிர நரம்புடையயாழின் அமைப்பினைப் புலப்படுத்துகின்றது. பெருங்கதையிலே வரும் யவனக்கைவினை மகரவீணை என்னும் கருவி யவன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/140&oldid=744990" இலிருந்து மீள்விக்கப்பட்டது