பக்கம்:இசைத்தமிழ்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பத்தர் என்பது யாழ் நரம்பின் ஒலியைப் பெருக்கும் முறையில் குடவடிவாகவும் தோணி வடிவாகவும் மகாமீன் வடிவாகவும் அமைக்கப்பெறும் யாழின் அடிப்பகுதியாகும். இது குமிழ், தனக்கு, முருக்கு என்னும் மரங்களாற் செய்யப் பெறும். இக்காலத்தில் வீணையில் குடம் என வழங்கப் பெறும் உறுப்பினை யொத்ததே பழைய யாழில் அமைந்த பத்தர் என்னும் உறுப்பாகும். பத்தருடன் இணைக்கப் பெற்று நரம்புகள் கட்டப்பெறுதற்கேற்ப வளைந்த மரத்தண்டு கோடு என்னும் உறுப்பாகும். யாழ்க்கோடானது கருங்காலி மரத்தினுற் செய்யப்பட்டு அழுத்தமுடையதாய்ப் பாம்பு பட மெடுத்தாற் போன்று தலைதூக்கி நிற்கும் முறையில் அமைந்திருக்கும். குடம் போன்று உள்ளே வெற்றிடமாகக் குடையப்பட்ட பத்தரின் உள்ளிடம் வறுவாய் எனப்படும். மான்குளம்பு அழுந்திய இடம் நடுவுயர்ந்து இருபுறமும் தாழ்ந்திருக்கும் தோற்றம்போலப் பத்தரின் கீழ்ப்புறம் அமைந்திருக்கும் பத்தரிற் குடைவாக அமைந்துள்ள வறு வாய்ப் பகுதியை மூடும் நிலையிற் பத்தரின் மேற் போர்க்கப் பெறும் தோல் போர்வைத்தோல் எனப்படும். இது, நரம்பு கள் பத்தரிலிருந்து வெளி வருவதற்கு இடந்தரும் முறையில் நடுவே பிளவுபட்டு இருகூருகத் தைக்கப்பெற்றிருக்கும். போர்வைத் தோலின் அடியிலே பத்தரின் உள்ளிடத்தில் யாப்பு என்னும் உறுப்பு அமைக்கப்பட்டிருக்கும். யாப்பு என் பது பத்தரின் குறுக்களவே நீளமாகச் சிறுவிரற் பருமளுக யானைத் தந்தத்தினலே செய்யப்பட்டு நரம்பு தொடுப்பதற் கும் நரம்பின் அசைவினைப் பத்தரிலே தாக்கி ஒலியைப் பெருக்குதற்கும் அமைந்த உறுப்பாகும். போர்வைத் தோலிற்கும் அதனடியில் நரம்பு கட்டப்பெற்றுள்ள யாப்பு என்னும் உறுப்பிற்கும் இடையே போர்வைத் தோலினைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/142&oldid=744992" இலிருந்து மீள்விக்கப்பட்டது