பக்கம்:இசைத்தமிழ்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 என்னும் குற்றமாகும். சிதறியொலித்தல் அதிர்வு என்னும் குற்றமாகும். இக்குற்றங்கள், நீரிலே நிற்றல், அழுகுதல், வேதல், திணை மயங்கிய கலப்பு நிலத்திலே நிற்றல், இடி வீழ்தல், நோய்ப்படல் ஆகிய மரக்குற்றங்களால் ஆவன என்பது சீவக சிந்தாமணியுரையில் நச்சினர்க்கினியர் காட்டிய உரை மேற்கோளால் இனிது புலம்ை. யாழுறுப் புக்களில் ஒன்றுகிய மாடகம் என்பது 'நால்விரலளவான பாலிகை வடிவாய், நரம்பினை வலித்தல் மெலித்தல் செய் யுங்கருவி எனச் சீவகசிந்தாமணியுரையிற் கூறப்பட்டது. மாடகம் முறுக்காணி எனவும் வழங்கப்படும். 'பிறை பிறந்தன்ன பின்னேந்து கவைக்கடை எனப் பெரும் பாளுற்றுப்படையிற் குறிக்கப்படும் கவைக்கடை என்பது பேரியாழினே நிறுத்தி வாசித்தற்கு வாய்ப்பாக அதன் பின்புறத்தே யாழ்க்கோட்டினைத் தாங்கி நிறுத்தும் முறையில் கவை வடிவில் அமைந்த உறுப்பாகும். திருஞான சம்பந்தப்பிள்ளையார் காலத்தவராகிய திரு நீலகண்ட யாழ்ப்பாணர். தம் மனைவியார் மதங்கசூளாமணி யாருடன் சீகாழிப்பதிக்குச் சென்று ஆளுடையபிள்ளையாரை வணங்கி அவர் பாடியருளிய திருப்பதிகங்களைத் தம் யாழில் இசைத்துப் பிள்ளையாருடன் தமிழ்நாடெங்குஞ் சென்று நாளும் இன்னிசைத் திறத்தால் தெய்வத்தைப் போற்றினர் என்பது வரலாறு. அவர் வாசித்த யாழ்க் கருவி சகோடயாழ் என்னும் பெயருடையதென்பது, திருநீலகண்ட யாழ்ப்பாணரைச் சகோடயாழ்த் தலைவர்' எனச் சேக்கி ழாரடிகள் போற்றுதலாற் புலனும் நால்வகை யாழ்களுள் சகோடயாழும் ஒன்றென்பதும் அதன் பழைய தமிழ்ப் பெயர் செம்முறைக் கேள்வி யென்பதும் அக்கருவியிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/144&oldid=744994" இலிருந்து மீள்விக்கப்பட்டது