பக்கம்:இசைத்தமிழ்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. இசைப்பாட்டின் இலக்கணம் இயல் இசை நாடகம் என வழங்கும் முத்தமிழுள் இயற்றமிழுக்குச் சிறப்புரிமையுடைய ஆசிரியம், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பாக்களைப் போலவே இசைத்தமிழுக்கும் நாடகத் தமிழுக்கும் சிறப்புரிமையுடைய பாடல் வகைகள் இன்னுருண்டுகளாக நம் முன்னேர்களாற் பாடப்பெற்று வழங்கி வந்துள்ளன. அவற்றுட் , பெரும்பாலன நம் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களாற் பேணுவாரின்றி மறைந்து போயின. தொன்மை வாய்ந்த இசை நாடகப் பாடல்கள் மறைந்தனவாயினும் அவற்றையடியொற்றிக் காலந்தோறும் இயற்றப்பெற்ற இசை நாடகப்பாடல் களாகிய இலக்கியங்களும் அவை பற்றிய இயல் அமைப் பாகிய இலக்கணங்களும் ஓரளவு கிடைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரியதாகும். தமிழகத்தின் தவப் பேருகத் தோன்றித் தொல்காப்பியத்திற்கும் சங்கச்செய்யுட்களுக்கும் சிலப்பதிகாரத்திற்கும் உரையெழுதிய பண்டையுரையாசிரி யர் பலரும் இயல் இசை நாடகம் என்னும் முன்று தமிழுள்ளும் இயற்றமிழில் நிரம்பிய தேர்ச்சியும் ஏனை இசை நாடகத் தமிழ்த்துறைகளிற் பொதுவகையான புல மையும் ஒருங்கே பெற்றுடையராய் இசைத்தமிழ் நாடகத் தமிழ் பற்றிய இலக்கணங்களையும் தம்முரைகளில் ஆங்காங்கே விளக்கியுள்ளார்கள். இச்செய்தி, தொல்காப்பியவுரை களிலும் சிலப்பதிகார உரைகளிலும் இடம் பெற்றுள்ள இசைத்தமிழ் நாடகத்தமிழ் பற்றிய அரிய குறிப்புக்களால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/154&oldid=745005" இலிருந்து மீள்விக்கப்பட்டது