பக்கம்:இசைத்தமிழ்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 46 'அவற்றுள் மரத்திரை யளவும் எழுத்தியல் வகையும் மேற்கினந்தன்ன என்மனுர் புலவர். (செய் 21 எனவரும் நூற்பாவில் மாட்டேற்று விதியில் தழுவிக் கொண்டார். புனேந்துரை வகையானும் உலக வழக்கானும் புலவ சாத் பாடுதற்கமைந்த புலனெறி வழக்கமாகிய அகனேந் திணியொழுகலாறு கலியும் பரிபாடலும் ஆகிய இருவகைப் பாவினுற் பாடுதற்குரியது என்னும் தொல்லோர் வழக்கி னேயும், கலியும் பரிபாடலும் ஆகிய அவ்விருவகைப் பாக் களும் இயற்றமிழுக்கு உரியவாதல் போன்று ஏனை இசைத் தமிழ் நாடகத் தமிழ் என்பவற்றுக்கும் ஒப்ப உரியன ஆதலேயும் உணர்த்துவது, நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புல்னெறி வழக்கம் கலியே பரிபாட் டாயிரு பாவினும் உரிய தாகும் என்மஞர் புலவர் (தொல். அகத். 52) எனவரும் தொல்காப்பியச் சூத்திரமாகும் இயற்றமிழ்ச் செய்யுட்களில் எழுத்துக்களை எண்ணியும் சீர்வகை பற்றியும் அடிவகுத்திருப்பது போலவே இசைத் தமிழ்ப் பாடல்களிலும் எழுத்துக்களைக் கணக்கிட்டும் சீர் வகை பற்றியும் அடி வகுத்துள்ளார்கள் எனத் தெரிகிறது. இருசீர் குறளடி, முச்சீர் சிந்தடி, நாற்சீர் நேரடி, ஐஞ்சீர் நெடிலடி, அறுசீர் முதலாக வருவன கழிநெடிலடி எனச் சீர்வகை பற்றிச் செய்யுட்களின் அடிகளை ஐந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/156&oldid=745007" இலிருந்து மீள்விக்கப்பட்டது