பக்கம்:இசைத்தமிழ்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 துள்ளல், துங்கல் என்னும் ஓசை விகற்பங்கள் தாளத்தினை அடிப்படையாகக் கொண்டவை. தாளம் பிழையாது நிற்கப் பாவினது உருவம் செவிக்குப் புலனுகும். அழகிய செந்தாமரை மலரையும் அதனுேடு கூடிய பசுமையான இலைகளையும் படத்தில் எழுதத் தொடங்கிய ஒவியன் முதலில் வெள்ளிய தளத்திலே நுண்ணிய வரை களிஞலே உருவத்தைத் தோற்றுவிக்கின்றன். இவ்வுரு வத்தைப் போன்றது தாளத்தோடு பொருந்திய செய்யுளின் ஒசை- பின் அவ்வோவியத்தின்மேல் செம்மை, பசுமை யென்னும் நிறங்களைத் தீட்டிச் சித்திரத்தை முடிக்கின்ருன், இயற்றமிழ்ப் பாவிளுேடு இசையினை இயைத்துப் பாடுத லென்பது இவ்வாறு நிறந்தீட்டுதல் போல்வதோர் செய்கையாகும். "நிறம் தோன்ற' எனச் சிலப்பதிகார உரையாசிரியர் வழங்கியிருத்தலை நோக்குங்கால், நிறம் என்னும் தமிழ்ச்சொல் இராகம் என்ற பொருளில் வழங்கிய தென்பது பெறப்படும். கடைச்சங்கத்தார் இயற்றிய பரிபாடல் நூலில் இப் போது கிடைத்திருக்கும் பாடல்களில் பலவற்றிற்குப் பாடி ஞர் பெயரும், பண்ணின் பெயரும். இசை வகுத்தார் பெயரும் குறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வகுத்தெழுதிய இசைமுறையும், அம்முறை பற்றிய இசைக்குறிப்பும் இக் காலத்தில் கிடைக்கவில்லை. "இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை, பெருங்குருகும் பிறவும் தேவஇருடி நாரதன் செய்த பஞ்சபாரதீயமும் முத லாகவுள்ள தொன்னூல்கள் இறந்தன" என அடியார்க்கு நல்லார் கூறுகின்ருர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/16&oldid=745011" இலிருந்து மீள்விக்கப்பட்டது