பக்கம்:இசைத்தமிழ்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.51 தாழிசைக்கலி, வண்ணகம் எனவும் ஒருபோகு எனவும் இரண்டாம். தரவு தாழிசை எண் (அம்போதரங்கம்) அடக் கியல்வாரம் (சுரிதகம்) என்னும் உறுப்பு முறையானே வருவது வண்ணக வொத்தாழிசையாகும். தரவினனே தெய்வத்தினை முன்னிலையாகத் தந்து நீறிஇப், பின்னர் அத்தெய்வத்தினைத் தாழிசையானே வண்ணித்துப் புகழ்த லின் (வண்ணகம் என) அப்பெயர் பெற்றது. சுரிதகம் என்னும் உறுப்பு முன்னர்ப் பலவகையாற் புகழப்பட்ட தெய்வத்தினை ஒரு பெயர் கொடுத்து அடக்கி நிற்றலின் 'அடக்கியல் எனவும், தெய்வக் கூற்றில் மக்களைப் புகழ்ந்த அடி மிக்கு வருதலின் வாரம் எனவும் பெயர் பெற்றது என்பர் பேராசிரியர். எண் என்னும் உறுப்பாவது இரண் டடியாகவும் ஒரடியாகவும் இருசீராகவும் ஒருசீராகவும் வரவரச் சுருங்கி வருவது. நீர்த்திரை போல வர வரச் சுருங்கி வருதலின் இதனை அம்போதரங்கம் எனவும் வழங் குவர், இவ்வாறு சுருங்கி வருங்கால் ஒரு சீரினும் குறைந்து அசையாகச் சுருங்கி வருதல் இல்லை. கந்தருவ நூலாகிய இசையினும் ஒரு சீரிற் சுருங்கி வரும் தொடர் கள் இல்லை என்பதனை ஒப்பிட்டு விளக்கும் நிலையில் அமைந்தது. 'அஃதேல் ஒரு சீரினுஞ் சுருங்கப் பெருதோவெனின் கந்தருவ நூலின்கண்ணும் ஒருசீரிற் சுருங்கின வாரா வாகலின் இவனும், பிறநூன் முடிந்தது தானுடம்படுதல் என்னும் உத்தி வகையான் ஒருசீரிற் சுருங்குதல் நேரான் என்பது (செய். 145 என வரும் பேராசிரியர் உரையாகும். இசைத்தமிழ்ப் பாடலில் முன்வந்த அடியே மீண்டும் இடைமடக்கி வருதல்போல இயற்றமிழ்ப் பாடலிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/161&oldid=745013" இலிருந்து மீள்விக்கப்பட்டது