பக்கம்:இசைத்தமிழ்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i57 முதல் நூலொடு மறுதலைப்படுதல் வழிநூற்குக் குற்றமாம் என அறிவுறுத்துவது, 'முதல் வழி யாயினும் யாப்பினுட் சிதையும் வல்லோன் புணரா வாரம் போன்றே" (தொல்.மரபு 107) எனவரும் நூற்பாவாகும். முதல் நூலின்வழி வழிநூல் செய் தான் ஆயினும் முதல் நூற்பொருளைத் தொகுத்தும் விரித் தும் தொகைவிரியாக்கியும் மொழிபெயர்த்தும் இயற்றும் யாப்பு வகையாலே முரண்பாடு நேர்தலுண்டு. எதுபோல வெனின் இசைத்தமிழில் வாரம் புணர்ப்போன் வல்லமை யில்லா தானுயின் அவனுற் புணர்க்கப்பட்ட வார இசை பொருந்தாததாய்ச் செவிக்கு இன்னுதவாறு போல’ என்பது இதன் பொருளாகும் இந்நூற்பாவில் வாரம் புணர்த்தல்' என்னும் இசைக் கிரியை குறிக்கப்பட்டுள்ளது. இசைப்பாட்டின் முற்பகுதியினை ஒருவரும் அதன் பிற்பகுதியினை மற்ருெருவரும் ஆகத் தம்முள் இசையில்ை ஒன்றிப்பாடும் முறையினை வாரம் பாடுதல் என வழங்குதல் இசைநூல் மரபு. இவ்விசை மரபினை இசையில் வல்லோரே தம்முள் வேற்றுமை தோன்ருது மேற்கொண்டு செலுத்தல் இயலும். இசையில் வல்லமையில்லாதான் வாரம் புணர்ப்பானுயின் முதற்கூறு பாடுவோன் புணர்த்த இசையோடு பொருந்தச் செய்யாத வாறு போல, வழிநூல் செய்வோன் நிலையான புலமை பெருன் எனின் அவனுற் செய்யப்பட்ட நூலும் முதல் நூற்பொருளொடு பொருந்துதலின்றி வழுப்படும் என்பது கருத்து. இதனைப் புலப்படுத்தும் முறையில், வல்லோன் புணரா வாரம் போன்றே-வாரம் புணர்ப்போன் வேருெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/167&oldid=745019" இலிருந்து மீள்விக்கப்பட்டது