பக்கம்:இசைத்தமிழ்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பாடல்களும், கட்டுரையும், அதனையடுத்து மாதவி பாடியன வாக ஆற்றுவரி (3) சார்த்துவரி (3) திணைநிலைவரி (6) மயங்குதிணை நிலைவரி (இருவேறு சந்தங்களில் 3 +3-6) சாயல்வரி (3) முகமில்வரி (!) என்பனவும் கட்டு ரையும் அதனை யடுத்து முகமில்வரி (4)ம் ஆக 26 இசைப் பாடல்களும் அமைந்துள்ளன. இவை யாவும் தொல் காப்பிய இலக்கணத்தின்படி அறுசீரடிகளாலும் நாற்சீரடி களாலும் இயன்ற கொச்சக வொருபோகுகளாகக் கொள் எத்தக்கன. ‘இனி வரிப்பாடலாவது பண்ணும் திறமும் செயலும் பாணியும் ஒருநெறியன்றி மயங்கச் சொல்லப்பட்ட எட்ட னியல்பும் ஆறனியல்பும் பெற்றுத் தன் முதலும் இறுதியும் கெட்டு இயல்பும் முடமுமாக முடிந்து, கருதப்பட்ட சந்தியும் சார்த்தும் பெற்றும் பெருதும் வரும் அதுதான் தெய்வஞ்சுட்டியும், மக்களைப் பழிச்சியும் வரும் என்பர் அரும்பதவுரையாசிரியர். முதல் நடை, வாரம், கூடை, திரள் என இசைப் பாடலின் ஒசையமைப்பு நால்வகைப்படும். அவற்றுள் முதல் நடை என்பது தாளத்தின் மந்த நடையாகிய தாழ்ந்த செலவினையுடையது. திரள் என்பது மிகவும் முடுகிய நடையினையுடையது. இடைப்பட்ட வாரப்பாடல் சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் உடையது. கூடைப்பாடல் சொற்செறிவும், இசைச் செறிவும் உடையது. "வார மென்பது வகுக்குங் காலே நடையினும் ஒலியினும் எழுத்தினும் நோக்கித் தொடையமைந்த தொழுகுந் தொன்மைத் தென்ப" எனவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/170&oldid=745023" இலிருந்து மீள்விக்கப்பட்டது