பக்கம்:இசைத்தமிழ்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பயின்ற குறுகிய நடையினதாய் (நான்கடியாய் வருதலே பன்றி, மூன்றடியாலும் இரண்டடியாலும் வருவது. இயற் நமிழிற் கொச்சகம் போன்று முடியும் இசைப்பாடல் கொச் சகச்சார்த்து எனப்படும். கானல்வரியில் கரியமலர் நெடுங் கண் என்பது முதலாகவுள்ள மூன்று பாடல்களும் முகச் சார்த்தின்பாற்படும் என்பர் அரும்பதவுரையாசிரியர். நும் மூர் யாது என வினவிய பாண்டியனை நோக்கித் திருஞான சம்பந்தப் பிள்ளையார் அருளிச் செய்த பிரமணர் வேணு புரம் என்ற திருப்பதிகம் சார்த்துவரியின் பாற்படும். கடற் கரைச் சோலையைக் குறித்தமைந்த இசைப்பாடல் கானல் வரி எனப்படும். நிணங்கொள்புலாலுணங்கல் 'வலைவாழ் நர்சேரி என்ற முதற் குறிப்புடைய பாடல்கள் கானல்வரி பின்பாற்படும், முல்லே, குறிஞ்சி, பாலே, மருதம், நெய்தல் எனப் படும் அகத்தினேயொழுகலாறுகளில் நிலைபெற்று ஒழுகும் தியிைற்பாடும் அகத்தினைபற்றிய இசைப் பாடல்கள் திணை நிலவளிப் பாடல்களாகும். கானல்வரியில் கடல்புக்குயிர் கொன்று என்பது முதல் சேரல் மடவன்னம் என்பது மூடியவுள்ள ஏழுயாடல்களும் புணர்துணையோடாடும்' என்பது முதல் நேர்ந்த நங்காதலர்’ என்பது முடியவுள்ள ஆறு பாடல்களும் மேற்குறித்த திணைநிலை வரிப்பாடல் களாகும். ஐந்திணைகளுள் ஒருதினைக்குரிய உரிப்பொருளும் மற்ருெருதினேக்குரிய முதற்பொருள் கருப்பொருள் களும் மயங்கிய (கலந்த)நிலையில் அமைந்த இசைப்பாடல் ‘மயங்குதிணை நில்ைவரி எனப்படும். கானல்வரியில் நன்னித் திலத்தின்' என்பது முதல் பறவையாட்டங்கினவே” என்பது முடியவுள்ள ஆறு பாடல்களும் மயங்குதினைநிலை வரியாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/174&oldid=745027" இலிருந்து மீள்விக்கப்பட்டது