பக்கம்:இசைத்தமிழ்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 தொல்காப்பியர் குறித்த வண்ணத்தியின் பாற்படுமென் பதும் இசைத்தமிழ்ப் பாவினங்களாகிய இவற்றையே பிற் கால யாப்பிலக்கண ஆசிரியர்கள் இயற்றமிழ்ப் பாக்களுக் குரிய இனமாகவும் தழிவிக் கொண்டன. ரென்பதும் இனிது புலகுைம். இசைப்பாட்டின் வகையுள் ஒன்ருகிய விருத்தமானது, கல்வியிற் சிறந்த கம்பர். அருள்மொழித் தேவராகிய சேக்கிழார், முருகனருள் பெற்ற கச்சியப்பர், நல்லிசை வாய்ந்த வில்லிபுத்துரார் முதலிய புலமைச் செல்வர்களின் செந்நாவிலே எத்தனையோ பலவாகிய அழகிய உருவங் களைப் பெற்று இசை நலமுடையதாய் வளம் பெற வளர்ந்துள்ளது. செந்தமிழ்க் கடவுளாகிய முருகப்பெருமானது திரு வருளில் திளைத்த செம்புலச் செல்வராகிய அருணகிரி நாதர் கந்தரந்தாதி, கந்தரலங்காரம், கந்தரநுபூதி என் னும் இயற்றமிழ்ப் பாமாலைகளையும் திருப்புகழ், திருவகுப்பு, வேல்விருத்தம், மயில்விருத்தம் ஆகிய இசைத்தமிழ்ப் பனுவல்களையும் இயற்றியருளி இசைத்தமிழ்த் திறங்களை வளர்த்த அருளாசிரியர் என்பதனைத் தமிழுலகம் நன்குணரும். பதினேராந் திருமுறையில் பட்டினத்துப் பிள்ளையார் பாடிய கோயில் நான்மணிமாலையில் வரும் ஆசிரிய விருத்தமாகிய சந்தச் செய்யுட்கள் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் என்னும் இசைப்பாடல்களுக்கு வழிகாட்டியாயமைந்தன என்பதன அருள்மிகு விபுலாநந்த அடிகளார் தாம் இயற் றிய வாழ்நூலில் எடுத்துக் காட்டி விளக்கியுள்ளார்கள். கோயில் நான்மணி மாலையிலுள்ள சந்தவிருத்த அமைப்பில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/186&oldid=745040" இலிருந்து மீள்விக்கப்பட்டது