பக்கம்:இசைத்தமிழ்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 அடிதோறும் ஈற்றில் தொங்கல் எனப்படும் தனிச்சொல்லினை இயைத்துத் தாளநுட்பங்கள் நன்கு பொருந்த அருணகிரி நாதரால் மூல இலக்கியமாக முதன்முதல் அமைக்கப் பெற்ற இசைப்பாடலின் அமைப்பே திருப்புகழ் என்னும் சந்த இசை இலக்கியமாகும் இதன்கண் அருணகிரி நாதர் காலத்து வழங்கிய இயலிசைப்பனுவல் வகைகளும் சிறந்த இராகங்களும் பண்களும் யாழ் வீணை என்னும் நரம்புக் கருவிகளும் குழல் முதலிய துணைக் கருவிகளும் இடக்கை, உடுக்கை முதலிய பலவகைத் தோற்கருவிகளும் கஞ்சக்கருவிகளும் தாளவகைகளும் குறிக்கப் பெற்றுள்ளன. திருப்புகழ் என்னும் இசைப்பாடல்களில் செந்தமிழ்க்கடவு எாகிய முருகப்பெருமானது முழுமுதற்றன்மையும், உயிர்க் குயிராகிய அம்முதல்வன் அடியார்களுக்கு அருள் செய்யும் பொருட்டு இச்சாசத்தி கிரியாசத்தி என்னும் வள்ளி தெய்வயானையாகிய தேவியர் இருவருடனும் ஞானசத்தி யாகிய வேற்படையினையேந்தி நீலமயில்மேல் அமர்ந்து எழுந்தருளும் தெய்வத் தோற்றமும் பாடுலோர் கேட்போர் நெஞ்சிற் பதியும் வண்ணம் விரித்துரைக்கப் பெற்றுள்ளன. செந்திறத்த தமிழோசை எனச் சிறப்பிக்கப்பெறும் தமிழின் இன்னேசைத் திறங்களையும் இசைக் கலைக்கு வரம்பாகிய தாளநுட்பங்களையும் பொதுமக்களும் உணர்ந்து போற்றி மகிழும் வண்ணம் சந்த இசைக்குச் சிறப்பளிக்கும் செந் தமிழ் இசையிலக்கியமாகத் திகழ்வது அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழ்ப் பனுவலே என்பது இயலிசை யறிஞர் யாவரும் ஒருமித்து ஏற்றுக் கொள்ளத்தக்க உண்மையாகும். இதுகாறும் கூறியவற்ருல் நம் தமிழ் மொழியில் சங்ககாலம் முதல் அருணகிரிநாதர் காலம் வரை தோன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/187&oldid=745041" இலிருந்து மீள்விக்கப்பட்டது