பக்கம்:இசைத்தமிழ்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 வளர்ந்த இசைப்பாட்டின் அமைப்புக்கள் ஒருவாறு விளக் கப்பெற்றன. தென்னுட்டு இசையரங்குகளில் இசைப் புலவர்களால் பெரிதும் விரும்பிப் பாடப்பெற்று வருவன கீர்த்தனம் என்னும் இசைப்பாடல்கள் என்பதனை யாவரும் அறிவர். இக்காலத்தில் பல்லவி, அநுபல்லவி, சரணம் என்னும் மூவகைஅங்கங்களைப் பெற்று வழங்கும் கீர்த்தனம் என்னும் இசைப்பாடல்களில் தமிழில் முத்துத் தாண்டவர் பாடியுள்ள கீர்த்தனங்களும் கன்னடத்திற் புரந்தரதாசர் பாடியுள்ள கீர்த்தனங்களும் தொன்மை வாய்ந்தனவாகும். இசைக்குச் சிறப்புரிமையுடைய இசைப்பாடல் வகையாகிய இக்கீர்த்தனங்கள் இயற்றமிழில் தரவு, தாழிசை, சுரிதகம் எனவரும் கலிப்பாவின் உறுப்புக்களே அடியொற்றி அமைந் தனவாகும். இசைப்பாட்டின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் அமைந்த முகநிலை, கொச்சகம், முரி என்னும் மூவகைக் கூறுகளையுடைய இன்னிசைப்பாடல்களை எண்ணு ருண்டுகளுக்கு முன்பே இசைத்தமிழ் நூலாரும் நாடகத் தமிழ் நூலாரும் இசையரங்குகளிலும் நாடக அரங்குகளிலும் நன்கு பயன்படுத்தியுள்ளார்கள் என்பதும் இசைப் பாட்டின் அங்கங்களாகிய முகநிலை கொச்சகம், முரி என்பன முறையே முதனிலை இடைநிலை இறுதிநிலை எனவும் அக் காலத்தில் வழங்கப்பெற்றன என்பதும் பேராசிரியர், அடி யார்க்கு நல்லார் உரைப்பகுதி கொண்டு முன்னர் விளக் கப்பெற்றன. அகப்பொருள் ஒழுகலாற்றில் காதலுணர் வாகிய அன்பின் திறத்தை மெய்ப்பாடு பொருந்த விரித் துரைக்கும் இன்னிசைப் பாடல்களே இக்காலத்தார் பதம் என வழங்குவர். முத்துத் தாண்டவர் சுப்பராமர் முதலிய இசைப்புலவர்கள் பாடிய பதம் என்னும் இசைப்பாடல்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/188&oldid=745042" இலிருந்து மீள்விக்கப்பட்டது