பக்கம்:இசைத்தமிழ்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#83 களில் நாள் வழிபாட்டில் இறைவனுக்குத் திருமஞ்சனமும், நறுமலரும், திருவமுதும், தீயது பமும், நான்மறை முழக்க மும், அந்தணர் வேள்வியும் இன்றி யமையாதவாறு போலவே, இறைவனது மெய்ம்மையான புகழ்த்திறங்களைப் பரவிப் போற்றும் செந்தமிழ்க் கீதமாகிய தெய்வப் பாடல் கள் மிகவும் இன்றியமையாதனவாகும். இவை திருக் கோயில்களில் இறைவனை வழிபட்டு நலம்பெறக் கருதி வரும் பல்லாயிரவராகிய மக்களது உள்ளத்தை நெகிழ் வித்து அன்னுேருள்ளத்தில் அருளாளனுகிய இறைவன் கோயில் கொண்டு விளங்கும் வண்ணம் பேரன்பாகிய பத்தியை விளைவிக்கும் ஆற்றல் வாய்ந்தன. ஆதலின் அண்ணலாகிய இறைவனைப் போற்றிய இசைத்தமிழ்ப் பாடல்களாகிய இவற்றைப் பத்திமைப் பாடல்’ என வழங்குவர் சான்ருேள். இறைவன் திருக்கோயில்களில் இன்றியமையாது இடம்பெறத்தக்க வழிபாட்டு முறைகளில் பாடுதலாகிய இத்திருத்தொண்டு மிகவும் சிறந்ததாகும். இனிய இசைத்தமிழ்ப் பாடல்களாகிய தோத்திரங்களைத் தாளத்தோடும் யாழ், வீணை, முழவு, மொந்தை முதலிய இசைக்கருவிகளோடும் அன்புடைய அடியார் பலர் கூடிப் பாடும் கூட்டத்தைவிட்டு இறைவன் கணப்பொழுதும் பிரியாது உடனிருந்து அருள் புரிவான் என்பது ஆன்ருேர் துணியாகும். "தமிழின் நீர்மை பேசித் தாளம் வீணைபண்ணி நல்ல முழவம் மொந்தை மல் கு பாடல் செய்கையிடம் ஒவார்’ (t–73–8) “வந்தனேந் தின்னிசை பாடுவார்பால் மன்னினர்’ (1–8–5) என ஞானசம்பந்தரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/193&oldid=745048" இலிருந்து மீள்விக்கப்பட்டது