பக்கம்:இசைத்தமிழ்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i85 திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாருரர் முதலிய அருளாசிரியர்கள் காலத்தில் தமிழ் நாட்டுத் திருக்கோயில்களில் நிகழும் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் தமிழ்மொழியே முதலிடம் பெற்று விளங்கியது. இறை வனது பெருங்கருணைத்திறத்தை வியந்து போற்றும் பத்திமைப் பாடலாகிய இசைத்தமிழ்ப் பாடல்கள் அக்கா லத்தில் சிறப்பிடம்பெற்றன. இச்செய்தி, 'செந்தமிழோர்கள் பரவியேத்தும் சீர்கொள் செங்காட்டங் குடியதனுள் கந்தம் அகிற் புகையே கமழும் கணபதியீச்சரம் (1-6-9; எனவும், தம்மலரடியொன் றடியவர் பரவத் தமிழ்ச் சொலும் வடசொலுந் தாள்நிழற்சேர அம்மலர்க் கொன்றை யணிந்த எம் அடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண்டாரே (1-77-4) எனவும், ‘செந்தமிழர் தெய்வமறை நாவர்செழு நற்கலே தெரிந்த அவரோடு அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரனுார் . விழிநகரே. 13-80-4) எனவும், "பண்ணியல் பாடலருத ஆவூர்ப் பசுபதியீச்சரம்” (i-8-1) "பத்திமைப் பாடலருத ஆவூர்ப் பசுபதியீச்சரம் (1-8-2) எனவும்வரும் தமிழ்ஞானசம்பந்தர் வாய்மொழிகளால் நன்கு விளங்கும். மேற்காட்டிய தொடர்களைக் கூர்ந்து நோக்குங்கால் ஆளுடைய பிள்ளையார் காலத்தில் தமிழ் நாட்டுத் திருக்கோயில்களில் தமிழ்மொழிப் பாடல்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/195&oldid=745050" இலிருந்து மீள்விக்கப்பட்டது