பக்கம்:இசைத்தமிழ்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#86 வடமொழி நான்மறைகளும் இறைவழிபாட்டிற்கு இன்றி யமையாத மறைமொழிகளாக ஒப்ப ஆளப்பெற்ற திறம் இனிது புலனுதல் காணலாம். பத்தராய்ப் பணியும் மெய்யன்பினராகிய அடியார் பலர், பரமனையே பாடும் இசைத்தமிழ்ச் செல்வர்களாய்த் திருக்கோயில்களில் தங்கியிருந்து உேையொருபாகனகிய இறைவனை இன்னிசைப் பாடல்களாகிய தெய்வப் பாடல்களாற் பரவிப் போற்றியும், அச் செழும் பாடல்களின் பொருள் நலங்களில் திளைத்தும், தம்மையொத்த மெய்யடி பார்களுடன் இறைவனது அருளியல்பினை யெடுத்துரைத்து அன்பினுல் அளவளாவியும் நெஞ்ச நெக்குருகிக் கண்ணிர் வார முழுமுதற் கடவுளே இடைவிடாது தியானித்தும் வழி பட்டிருந்தனர். இச் செய்தி, “கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் பாதத்தைத் தொழிநின்ற பரஞ்சோதி பயிலுமிடம் 2-43-5) *பண்ணுென்ற இசைபாடும் அடியார்கள் குடியாக மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்’ {2-43-83 'பாடுவாரிசை பல்பொருட் பயனுகர்த் தன்பாற் கூடுவார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித் தேடுவார்பொரு ளானவன் செறிபொழில் தேவூர் ஆடுவானடி யடைந்தனம் அல்லலொன்றிலமே (2-82-5) ‘தென்தமிழ்க்கலே தெரிந்தவர் பொருந்திய தேவூர் அன்பன் சேவடிவடைந்தனம் அல்லலொன்றில்மே” (2-82-7) 'கலவ:ாயி லாளொர் பங்கனைக் கண்டு கண்மிசை நீர்நெகிழ்த்திசை குலவுமாறு வல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்’ எனவரும் திருப்பதிகத் தொடர்களால் இனிது விளங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/196&oldid=745051" இலிருந்து மீள்விக்கப்பட்டது