பக்கம்:இசைத்தமிழ்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#87 தமிழ்நாட்டில் இசைத்திறத்தில் வல்ல ஆடவரும் மகளிரும் நாட்காலேயே துயிலெழுந்து நீராடித் தூய சிந்தையுடன் திருக்கோயிலையடைந்து இறைவனது அருளி யல்பினை நினைந்து ஆரா அன்பினுல் நெஞ்ச நெக்குருகிக் கண்ணீர் மல்கி இனிய இசைப்பாடல்களைப் பாடியும், யாழ் வீணே முழவு மொந்தை முதலிய இசைக் கருவிக்ளே வாசித்தும், இசைப் பாடல்களின் சுவை நலங்கள் புலப் படும் வண்ணம் விறல்பட ஆடியும் தெய்வ வழிபாட்டில் திளைத்து மகிழ்ந்தார்கள். "துன்னிய மாதரும் மைந்தர் தாமுஞ் சுனையிடை மூழ்கித் துதைந்த சிந்தைப் பன்னிய பாடல் பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சரம்' {i-8-10) "புண்ணிய வாணரும் மாதவரும் புகுந்துடனேத்தப் புனேயிழையார் அண்ணலின் பாடலெடுக்குங் கூடலால் வாய்" {1-7-3) 'அஞ்சுடரோ டாறுபத மேழினிசை யெண்ணரிய வண்ணமுளவாய் மஞ்சரொடு மாதர்பலருந் தொழுது சேரும்வயல் வைகாவிலே’ (3.71-6) "இசை வரவிட்டியல் கேட்பித்துக் கல்ல வடமிட்டுத் திசை தொழுதாடியும் பாடுவார் சிந்தையுட் சேர்வரே' كيس 9 س 3) "பண்ணிய நடத்தொடிசை பாடும் அடியார்கள் நண்ணிய மனத்தின் வழிபாடுசெய் நள்ளாறே (2-33-2) எனவரும் திருப்பதிகத்தொடர்கள், பண்டை நாளில் இசை யில் வல்ல ஆண்களும் பெண்களும் திருக்கோயில்களிற் சென்று இறைவன் புகழைப் பண்ணுர்ந்த பாடல்களாற் பாடி வழிபாடு செய்த திறத்தை நன்கு புலப்படுத்துவன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/197&oldid=745052" இலிருந்து மீள்விக்கப்பட்டது