பக்கம்:இசைத்தமிழ்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழேயன்றிப் பிற மொழிகளைத் தாய்மொழியாகப் பெற்று வேறுதிசையில் வாழும் ஆடவரும் மகளிரும் தமிழகத்திலுள்ள திருக்கோயில்களை வழிபட்டு இங்குப் பாடப்பெறும் இசைத் தமிழ்த்திறங்களை நன்குணர்ந்து பாடும் பயிற்சியைப் பெற்றனர். பொழுது புலர்வதன் முன்னரே துயிலெழுந்து நீர்மூழ்கித் திருக்கோயிலில் வழி படவரும் மாந்தரது மனவிருள் நீங்கும்வண்ணம் தாம் பயின்ற இசைத்தமிழ்ப் பாடல்களையும் முன்னரே கற்று ணர்ந்த வடமொழித் தோத்திரங்களையும் ஏனைத்திசைமொழி யிசைப்பாடல்களையும் வீணை முதலிய நரம்புக் கருவிகளில் வைத்து வாசித்து மகிழ்ந்தார்கள், இந்நிகழ்ச்சி, 'ஊறுபொரு னின்றமி ழியற்கிளவி தேருமட மாதருடனர் வேறு திசை யாடவர்கள் கூற இசை தேருமெழில் வேதவனமே” (3-78-4) எனவும், ‘தென்சொல்விஞ்சமர் வடசொல் திசைமொழியெழில் நரம்பெடுத்துத் துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல் புகலூரில்’ {2-92-7) எனவும் வரும் திருஞானசம்பந்தர் தேவாரத் தொடர்களால் நன்கு புலளுதல் காணலாம், இசைத்திறத்தால் நன்கு தேர்ந்தவர்களே யன்றி இசைத்துறையிற் போதிய பயிற்சியும் குரல் வளமும் பொருளுணர்ந்து பாடும் மொழிப் பயிற்சியும் உடல் வன்மையும் நன்கு வாய்க்கப்பெருத முதியவர்களும், இறைவன்பாற்கொண்ட பேரன்பாகிய பத்தியினல் தம்மால் இயன்ற அளவு பத்திமைப் பாடல்களாகிய இசைப் பாடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/198&oldid=745053" இலிருந்து மீள்விக்கப்பட்டது