பக்கம்:இசைத்தமிழ்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 குடுமியா மலையில் இவ்வேந்தல்ை பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டின் முடிவிலே, 'எட்டிற்கும் ஏழிற்கும் இவையுரிய” என்ற இசைக் குறிப்புத் தொடர் தமிழில் பொறிக்கப் பட்டுள்ளது. இத்தொடரை ஊன்றி நோக்குங்கால் இக் கல்வெட்டு அக்காலத்து வழங்கிய பழந்தமிழ் இசையினைக் கூறுவது என்பது நன்கு தெளியப்படும். திருஞானசம்பந்த ரும், திருநாவுக்கரசரும் பாடிய திருப்பதிகங்களும் இக்கல் வெட்டும் கி,பி. 7-ஆம் நூற்ருண்டில் தமிழகத்தில் வழங்கிய இசைமரபினைத் தெளிவாகத் தெரிவிப்பன என யாழ் நூலாசிரியர் விபுலானந்த அடிகளார் தம் யாழ் நூலில் குறித்துள்ளார். கி.பி. 8-ஆ நூற்ருண்டிலே சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தே மதுரையில் வாழ்ந்த இசைப்பாணராகிய பாண பத்திரனர் திருவாலவாய்ப்பெருமான் பாடிக்கொடுத்த திரு முகப் பாசுரத்தைப் பெற்றுச்சென்று சேர நாட்டினை ஆண்ட சேரமான் பெருமாளைக் கண்டு பெரும்பொருளினைப் பரி சாகப் பெற்றனர். தேவார ஆசிரியர் காலத்தை அடுத்துச் சோழ நாட்டில் உறையூரிலே தோன்றிய திருப்பாளுழ்வார் என்னும் பாணர் திருவரங்கச் செல்வளுர்க்கு இசைத் தமிழ்த் தொண்டு செய்து ஈறிலாப் பேறு பெற்றனர். இசையில் வல்ல ஆளுய நாயனர் வேய்ங்குழலில் இறைவனது திருவைந்தெழுத்தை இசைச் சுரங்களாகக் கொண்டு வாசித்து இசையுருவாகிய இறைவனது திருவருள் பெற்ற னர். நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி பழந்தமிழ்ப் பண்களும் பழையஇலக்கணத்திற்கேற்ற தாளமும் அமையப் பெற்றதாகும். 15-ஆம் நூற்ருண்டின் தொடக்கத்தினர் எனக் கருதப்பெறும் அருணகிரியார் முருகப்பெருமானைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/20&oldid=745055" இலிருந்து மீள்விக்கப்பட்டது