பக்கம்:இசைத்தமிழ்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 இங்ங்னமே தேவார ஆசிரியர்கள் காலத்தும் தென் குட்டுத் திருக்கோயில்களில் இறைவனைச் சேவித்துத் தெய்வப்பாடல் பாடும் மகளிர், இனிய இசை மொழியும் உடல் வனப்பும் தூய்மையும் நற்குணங்களெல்லாவற்றுக்கும் இடனுகிய உள்ளத்தூய்மையும் ஒருங்குடையராய், எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளது அருள்மேனி வண்ணங்களும் வரம்பிலாற்றலும் நலம்வளர் ஞானஉரைகளும் ஆகிய பெருஞ்சீர்த்திகளைப் பொருளாகக் கொண்ட இன்னிசைச் செழும் பாடல்களே இறைவன் திருமுன்னர்ப் பாடிப் போற்றிஞர்கள். இச்செய்தியின, "பண்ணினல்ல மொழியார் பவளத்துவர் வாயினர் எண்ணினல்ல குணத்தார் இணைவேல்வென்ற கண்ணினுர் வண்ணம்பாடி வலிபாடித்தம் வாய்மொழி பாடவே அண்ணல் கேட்டுந்தானும் ஐயாறுடை ஐயனே" எனவரும் திருப்பாடலில் ஆளுடைய பிள்ளையார் அழகுறக் குறிப்பிட்டுள்ளார். பண்ணுர்த்த பாடல்களால் இறைவனைப் பாடிப்போற்று தலாகிய இத்திருப்பணி யாவராலும் விரும்பி மேற்கொள்ளத் தக்க எளிமையும் இனிமையும் ஒருங்குடையதென்பதும், இவ்வினிய சாதனத்தை மேற்கொள்ள மனமில்லாதார் இதனின் மிக்க மற்றைத் தொண்டுகளை மேற்கொண்டு பத்தி செய்ய இயலாதென்பதும் அருளநுபவமுடைய அடி யார்களின் துணியாகும். "பத்தளுய்ப் பாடமாட்டேன் பரமனே பரம யோகி எத்தினும் பத்திசெய்கேன் என்னநீ யிகழவேண்டல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/200&oldid=745056" இலிருந்து மீள்விக்கப்பட்டது