பக்கம்:இசைத்தமிழ்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#92 செய்தார் பெறும் பேறு இவ்வளவு இவ்வளவு என உணர்த்திய அடிகள், புகழ்த்திறத்தால் அளவில்லனவாகிய இசைப்பாடல்களால் இறைவனைப் போற்றினர்க்கு அவற்றி னும் மேலாகக் தரத்தக்க பெருமையுடைய பொருள் பிறி தின்மையின், பரமனையே பாடுவாராகிய அவ்வடியார் களுக்கு இறைவன் தன்னைத் தானே பரிசிற் பொருளாக வழங்கியருள்வான் என்பார், அனப்பில கீதஞ்சொன்னுர்க்கு அருளுமாறு (கைம்மாருக நல்கத்தக்க பொருள்) அடிகள் தாம் (இறைவனே) என்ருர் எனக் கொள்ளுதற்கும் இட முண்டு. இத்திருப்பாடல், இறைவனை அன்பினல் வழி படுதற்கு இனிய சாதனமாக விளங்குவன இசைப் பாடல் களேயென்ற உண்மையிளே நன்கு வலியுறுத்தல் காண்க. தனக்குவமை யில்லாதாளுகிய முழுமுதற் கடவுளை மக்கள் வழிபட்டு உய்திபெறுதற்கு இன்றியமையாத சாதன மாக அமைந்த இசையானது, இவ்வுலக வாழ்க்கையில் மக்கட் குலத்தார் தம்முட் பகையின்றி அன்புடையராய் மனங்கலந்து பழகுதற்கும் காம வெகுளி மயக்கம் எனப் படும் மனமாசு நீங்கி உயர்ந்த பொருளே எண்ணுதற்கும் என்றும் இன்பம் பெருகும் இயல்பினுல் நன்றே புரிந்து எவ்வுயிர்க்கும் இனியராய் இனிது வாழ்தற்கும் இனிய உயிர்த்துணையாகவும் திகழ்கின்றது. எல்லோரும் கண்டு அஞ்சுதற்குரிய நஞ்சுடைய பாம் பினையும் பாகனுக்கடங்காத மதயானையினையும் ஆறலை கள்வர் முதலிய கொடியோர்களையும் கொடுமைகளைந்து அடங்கி யொழுகச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது இசை என்பதனைப் புலவர்கள் தம் காப்பியங்களில நன்கு விளக்கி யுள்ளார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/202&oldid=745058" இலிருந்து மீள்விக்கப்பட்டது