பக்கம்:இசைத்தமிழ்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 செவிப்புலனுக்கு இன்பம் தருதலும், துன்பத்தாற் கலக்கமுற்ற உள்ளத்திற்குத் தேறுதலளித்துத் தெளிவினை நல்குதலும், ஐம்பொறிகளால் ஈர்க்கப்பட்டுப் புறத்தே யலே யும் மனத்தினைத் தீமையின் நீக்கி நன்றின்பால் நிறுத்து தலும், மக்களின் மனவிருள் நீங்க அவர்தம் மனத்தகத்தே அறிவொளியைத் தோற்றுவித்தலும், மக்கள் பழிநீக்கித் திருந்து தற்கேற்ற வன்சொல்லாற் குற்றங்கடிதலும், செய்யத் தக்கது. இது என்பதனை ஐயுறவுக்கு இடமின்றி இறுதியாக முடித்துக் கூறுதலும், சினத்தால் மிகைசெய்ய எழுந்தாரை வெகுளியைத் தணித்து மென்மைப்படுத்துதலும், மனத் துயரால் தளர்ச்சியுற்ருரைச் சோர்வு நீக்கிக் கிளர்ந் தெழும்படி ஊக்கமளித்து உயர்த்துதலும் ஆகிய இவை எட்டும் இசைப் பாடல்களின் எண்வகைப் பயன்களாகும். 'இன்பந் தெளிவே நிறையோ டொளியே வன்சொல் இறுதி மந்தம் உச்சமென வந்த எட்டும் பாடலின் பயனே’’ (சிலப். அரங்கேற்று-உரை மேற்கோள்) எனவரும் நூற்பா, இசைப்பாடல்களால் உலக மக்கள் எய்துதற்குரிய இம்மைப் பயன்கள் இன்பம், தெளிவு, நிறை, ஒளி, வன்சொல், இறுதி, மந்தம், உச்சம் என எட்டாகும் எனத் தொகுத்துரைத்தல் காணலாம். செவ்வியமுறையில் வாசிக்கப்பெறும் நல்லிசையானது மக்களுள்ளத்தே படிந் துள்ள மனமாசுகளைக் கழுவித் துயநன்னெஞ்சத்தினராய் எவ்வுயிர்க்கும் அன்புடையராய் வாழும் இன்ப வாழ்க்கை யினை நல்கும் என்பது, "மகர வீணையின் மன மாசு கழி இ' (பெருங். உஞ்சை. கூடு 2.18) எனவரும் கொங்குவேள் வாய்மொழியால் இனிது புலனுகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/203&oldid=745059" இலிருந்து மீள்விக்கப்பட்டது