பக்கம்:இசைத்தமிழ்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3, தமிழிசை இயக்கம் தமிழ்நாடு தமிழ் மன்னர்களால் ஆளப்பட்ட கடைச் சங்ககாலம் வரையில், இசைத் தமிழ் நன்கு வளர்ந்து வந்தது. பின்பு, கி. பி. மூன்ரும் நூற்ருண்டின் இடைப் பகுதி முதல் கி.பி. ஏழாம் நூற்றண்டுவரையில் தமிழ்நாடு அயலார் ஆட்சிக்கு உட்பட்டிருந்தமையில்ை, அக்காலத்தில் இசைத்தமிழ் போற்றுவாரற்று வீழ்ச்சியடைந்தது. கி. பி. ஆரும் நூற்ருண்டின் இறுதியில், பாண்டியன் கடுங்கோன் என்பவன் களப்பிரரைப் போரில் வென்று பாண்டிய நாட்டைக் கைப்பற்றின்ை. அக்காலம் முதல், அந்நாடு பாண்டியர்களின் ஆட்சிக்கு உள்ளாயிற்று. அந்நாட்டின் தலைநகரமாகிய மதுரையில், ஒர் இசைச் சங்கம் நிறுவி, இசைத்தமிழைப் பாண்டிய மன்னர் வளர்த்தனர். - ‘கூடலின் ஆய்ந்த ஒண்டீந் தமிழின் துறை வாய் நுழைந்தனேயோ அன்றி ஏழிசைச் சூழல் புக்கோ’ (திருக்கோவை) என்னும் மாணிக்கவாசகர் வாய்மொழி இதனைப் புலப்படுத் தும். பாண்டிய மன்னனுெருவன், தன் அரியணைக்கு 'இசையளவு கண்டான்' எனப் பெயரிட்டிருந்தனன் என் பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கி. பி. ஏழாம் நூற்ருண்டில் திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் தமிழோடு இசைபாடி இசைத்தமிழை வளர்த்தனர். வேற்று நாட்டினரும் தமிழ் நாட்டிற்கு வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/204&oldid=745060" இலிருந்து மீள்விக்கப்பட்டது