பக்கம்:இசைத்தமிழ்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 இசைபயின்றனர் என்ற உண்மை, திருஞானசம்பந்தர் தேவாரத்தினல் அறியப்படுகின்றது. அக்காலத்தில் தொண்டை நாட்டினையும் சோழ நாட்டினையும் ஆட்சிபுரிந்த பல்லவ வேந்தனுகிய முதல் மகேந்திரவர்மன் இசைக் கலையில் வல்லவகை விளங்கினன். குடுமியான் மலையில் அவன் வரைந்த இசைக்கல்வெட்டினல் அவனது இசைப் புலமை இனிது புலனும், கி.பி 8,9-ஆம் நூற்ருண்டுகளில், சுந்தரமூர்த்தி நாயனரும் பெரியாழ்வார் முதலிய ஆழ்வார் களும் அருட்பாக்கள் பாடி, இசையை வளர்த்தனர். கி.பி. ஒன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் முதல் ஆதித்த சோழன் சோழர் பேரரசை நிறுவினன். இவளுல் நிறுவப்பெற்ற சோழப்பேரரசு கி. பி. பதின்மூன்ரும் நூற்ருண்டின் பிற்பகுதி வரையில் (நானூறு ஆண்டு கட்கு மேல்) நடைபெற்றது. அக்காலத்தில் சோழ அரசர் கள், சைவ சமய குரவர்களின் திருப்பதிகங்களைத் திருக் கோயில்களில் நாள்தோறும் பண்களுடன் பாடுவதற்கு நிவந்தங்கள் வழங்கி இசைத் தமிழை வளர்த்தனர். முதற் குலோத்துங்க சோழன், இசைத்தமிழ் நூலொன்று இயற்றி யிருந்தான் என்று கலிங்கத்துப்பரணி குறிப்பிடுகின்றது. அச்சோழனின் மனைவி இசைப்புலமையில் சிறந்து விளங் கினமையால் ஏழிசை வல்லபி என்னும் சிறப்புப் பெயர் பெற்ருள். இவ்வாறு இனிது வளர்ந்து மிக உயர்நிலையிலிருந்த இசைத்தமிழ் பிற்காலத்தில் அயலவர் படையெழுச்சியால் உண்டாகிய குழப்பத்தினுல் வீழ்ச்சியடைந்தது. பின் விசயநகர வேந்தர் படையெடுத்துத் தமிழகத்தினைத் தன்னடிப்படுத்தினமையாலும், அதன்பின் அரசாண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/205&oldid=745061" இலிருந்து மீள்விக்கப்பட்டது