பக்கம்:இசைத்தமிழ்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 கற்றுக்கொள்வதற்கு உதவியாக, ஒராண்டுத் தமிழிசை வகுப்பொன்றும் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் தொடங்கப்பெற்றது. இவ்வகுப்பிலும், நான்கு ஆண்டு களிற் கற்பிக்கப்பெறும் சங்கீதபூஷண வகுப்பிலும் தமிழிசைப் பாடல்களைக் கற்றுத் தேர்ந்த இந்தியநாட்டு மாணவர்களும், இலங்கை மாணவர்களும் பற்பலராவர். இவ்வாறு தமிழிசை வளர்ச்சிக்கு அண்ணுமலைப் பல்கலைக் கழகம் ஆற்றிவரும் அரும்பணியில் பல்கலைக்கழக இணை வேந்தர் டாக்டர் ராஜாசர் முத்தைய செட்டியாரவர்கள் தம் தந்தையாரவர்களைப் போலவே பேருக்கம் காட்டி ஆதரவளித்து வருவது தமிழ் மக்களின் நற்பேருகும். தமிழிசையைச் சிறப்பாக வளர்த்தற் பொருட்டும் இசையரங்குகளில் தமிழ்ப் பாடல்களையே மிகுதியாகப் பாடுந்திறத்தில் இசைவாணர்களே ஊக்குவித்தற் பொருட் டும் தமிழ்ச் செல்வர்கள், அறிஞர்கள் ஆட்சியாளர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவருடைய ஆதரவும் கொண்டு அண்ணுமலையரசரவர்கள் 1943 ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழிசைச் சங்கத்தினைத் தமிழகத் தலைநகராகிய சென்னை யில் நிறுவினர்கள். தமிழிசையியக்கம் கண்ட பெருங்கொடை வள்ளல் ராஜாசர் அண்ணுமலைச் செட்டியாரவர்களால் முப்பத்தாறு ஆண்டுகட்குமுன் தமிழகத்தின் தலைநகரமாகிய சென்னைமா நகரில் நிறுவப்பெற்ற தமிழிசைச் சங்கம், ஆண்டு தோறும் இசைப் பெரும் புலவர்களைக் கூட்டி இசையரங்கு களைத் தொடர்ந்து நிகழ்த்தி வருவதனை யாவரும் அறிவர். இச்சங்கத்தின் நிலையமாகத் திகழும் அண்ணுமலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/209&oldid=745065" இலிருந்து மீள்விக்கப்பட்டது