பக்கம்:இசைத்தமிழ்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பிறந்த பாடினியாரைக் கொண்டு தேவாரத் திருப்பதிகங் கட்குரிய பழைய பண்ணமைதியினை வகுத்தமைத்தனன் எனத் திருமுறை கண்ட புராணம் கூறுகின்றது. கி. பி. 13ஆம் நூற்ருண்டில் வடநாட்டில் தவுலதா பாத் தேவகிரி இராச்சியத்தில் சிம்மண ராஜ சபையில் சமத்தான வித்துவானுக விளங்கிய சாரங்கதேவர் என்னும் பெரியார் தமிழ்நாட்டிற்கு வந்து இங்கு வழங்கிய தேவாரப் பண்களே நன்குணர்ந்து, அப்பண்கள் சிலவற்றின் இலக் கணங்களைத் தாம் இயற்றிய சங்கீத ரத்தினகரம் என்னும் வடமொழி இசைநூலில் பொன்னே போல் போற்றி வைத் துள்ளார். பாஷாங்க இராகங்களைக் கூறுமிடத்துத் தக்க இராகத்தின் விபாஷையாகிய தேவார வர்த்தநீ என்றும், மாளவ கைசிகமாகிய தேவார வர்த்தநீ என்றும் முறையே தக்க இராகத்திற்கும் கெளசிகத்திற்கும் இவ்வாசிரியர் கூறும் இலக்கணம் இதனை வலியுறுத்தும். திருவாதவூரடிகள் அருளிய திருவாசகத்துள் வரும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, திருவம்மானை, திருப் பொன்னூசல், திருப்பூவல்லி, திருக்கோத்தும்பி முதலியன முத்தமிழுக்கும் இலக்கியமாகத் திகழ்கின்றன. கொங்குவேள் செய்த உதயணன் கதையாகிய பெருங்கதையும், திருத் தக்க தேவர் பாடிய சீவக சிந்தாமணியும் சொல்வளமிக்க கல்லாடம் என்னும் நூலும் பத்த்ாம் நூற்ருண்டிலும் பதினேராம் நூற்ருண்டிலும் தமிழ் நாட்டில் வழங்கிய இசைத் தமிழின் இயல்பினை ஒருவாறு புலப்படுத்துவன. சேந்தனர் முதலிய ஒன்பதின்மராற் பாடப்பெற்ற திரு விசைப்பாப் பாடல்கள் தேவாரத்தினை யொத்துப் பண்ண மைக்கப் பெற்றுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/22&oldid=745073" இலிருந்து மீள்விக்கப்பட்டது