பக்கம்:இசைத்தமிழ்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16-ஆம் நூற்ருண்டுகளிலே இசைத்தமிழ் பிறமொழிக்குறி யீடுகளால் முற்றிலும் மறைந்து போயிற்று. 17, 18-ஆம் நூற்ருண்டுகளிலே தஞ்சையில் அரசு புரிந்த நாயக்கரும் மகாராட்டிரரும் இசைவல்லோரை ஆதரித்து இசைக்கலையை வளர்த்தார்கள். எனினும் அவர்கள் தமிழல்லாத மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவராதலின் தமிழ்மொழி வாயிலாக இசை வளர்க் கும் தொண்டினை அவர்கள் மேற்கொள்ளுதற்கு இயலாது போயிற்று. அச்சுதப்ப நாயக்கரிடத்து அமைச்சராயிருந்த கோவிந்த தீட்சிதரின் குமாரர் வேங்கடமகி யென்பார், கி.பி. 1660-ஆம் ஆண்டளவில் பண்டையிசைத் தமிழ் மரபி னின்றும் வேறுபட்டதோர் இசைமுறையினை வகுத்துச் சதுர்த்தண்டிப் பிரகாசிகையென்னும் வடமொழி நூலினை யாத்தமைத்தார். இவரால் அரிதில் முயன்று வகுக்கப் பட்டவை எழுபத்திரண்டு மேளகர்த்தா இராகங்களாம். இவற்றுள் மிக்க பழமையுடையனவாக வழங்கி வரும் 32 இராகங்களைத் தவிர, ஏனைய 40 இராகங்களும் அனுபவத் திற்குப் பயன்படுவன அல்ல என்று சமீப காலத்திலிருந்த மதுரை நாகசுர வித்துவான் பொன்னுச்சாமிப் பிள்ளையவர் கள் சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களின் ஆதரவு கொண்டு தாம் எழுதிய பூர்வீக சங்கீத உண்மை என்னும் நூலில் விளக்கியுள்ளார்கள் இற்றைக்கு ஏறக் குறைய 250 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த அரபத்த நாவ லர் இயற்றிய பரதசாத்திரமும், அறம் வளர்த்தான் என்னும் ஆசிரியர் இயற்றிய பரத சங்கிரகமும் ஆகிய இந்நூல்கள் இசைத்தமிழ் மரபினை ஒரளவு விளக்குவனவாயினும் பிற் காலத்தில் வந்து கலந்த வடமொழி இசைமரபினையும் வேற்றுமையின்றி விரவிக் கூறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/24&oldid=745075" இலிருந்து மீள்விக்கப்பட்டது