பக்கம்:இசைத்தமிழ்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 தமிழிசை யிலக்கியமாகக் கீர்த்தனைகளே யியற்றிய முத்துத்தாண்டவரும், இராம நாடகக் கீர்த்தனே பாடிய அருணசலக் கவிராயரும் பிற்கால இசை மரபின்படி பல்லவி, அநுபல்லவி சரணம் என்ற முறையில் இசைப் பாடல்களே யியற்றித் தமிழ் வளர்த்தவராவர். அருணசலக் கவிராயர் (1711 - 1776) அவர்களும் தெலுங்கில் கீர்த்தனைகளைப் பாடிய தியாகையர் (1767 - 1847) அவர்களும் ஏறக் குறைய சமகாலத்தில் வாழ்ந்தவர் என்பர். ஆனே ஐயா, கவிகுஞ்சரபாரதி, பெரியபுராணக் கீர்த்தனை, கந்த புராணக் கீர்த்தனை முதலியவற்றின் ஆசிரியராகிய இராமசாமி சிவன், நந்தனர் சரித்திரக் கீர்த்தனை பாடிய கோபாலகிருஷ்ண பாரதியார், சர்வசமய சமரசக் கீர்த்தனை பாடிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தமிழ்மணங்கமழக் கீர்த்தனைகளும், நாமாவளிகளும் பாடிய இராமலிங்க அடிகள், காவடிச் சிந்து பாடிய அண்ணுமலை ரெட்டியார், கீர்த்தனைகன் பாடிய மாரிமுத்தாப்பிள்ளை முதலியோர் 19 ஆம் நூற்ருண்டினை அடுத்து இசைத்தமிழ்ப் பாடல்களை இயற்றி இசை வளர்த்த பெரியோராவர். இனி இயற்றமிழிலக்கியத்திலே விருந்தின் வகையாய்ச் சிறு நூல்களெனக் கருதப்பெறும் குறவஞ்சியும் பள்ளும் இசையை வளர்க்கத் துணை புரிந்தன. உழத்திப் பாட் டாகிய பள்ளு, நாட்டுப் பாடல் வகையில் சேர்ந்ததாயினும் இலக்கியச் சுவையும் பொருந்தியது. இருபதாம் நூற்ருண்டின் தொடக்கத்திலே தஞ்சை யில் வாழ்ந்த செந்தமிழ்ச் செல்வரான ஆபிரகாம் பண் டி.தரவர்கள் தமக்குள்ள தமிழார்வத்தாலும், இயலிசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/25&oldid=745076" இலிருந்து மீள்விக்கப்பட்டது