பக்கம்:இசைத்தமிழ்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 ஒவியத்தின்மேல் அதன் உருவிற்குத் தக்க செம்மை, பசுமை முதலிய நிறங்களைத் தீட்டுவது போன்றது, பாவோடு இயைத்துரைக்கப்படும் இசையாகும். நிறம் என்ற தமிழ்ச்சொல்லோடு ஒத்த பொருளுடையது இராகம்’ என்ற வடசொல். பாவோடு நிறத்தினை (இராகத்திணை) இசைத்தலால் இசையெனப்பட்டது. பண்ணுதல் என்னும் வினையடியாகப் பிறந்தது பண். மிடற்றுப்பாடல், குழல் யாழ் முதலிய இசைக்கருவிகளின் ஒலி, இவற்றின் கால அளவினை வரையறுக்கும் தாள அமைப்பு ஆகிய இவை மூன்றும் ஒத்திசைத்து இயங்குவது இசையாகும். இசைக்குரிய சுரங்கள் ஏழாகும். ஏழிசையாய் இசைப் பயனுய் (7-51-10) எனவும், ஏழிசையேழ் நரம்பின் ஒசையை (7-83-5) எனவும் வரும் திருப்பதிகத் தொடர் கள் இசை ஏழென்றும் அவ்வேழிசைகளையும் தனித்தனி நரம்புகளில் இசைத்து அறியும் முறையில் அக்காலத்தில் நரம்புக்கருவிகள் அமைந்திருந்தன என்றும்புலப்படுத்துவன. குரல், துத்தம்; கைக்கிளே; உழை; இளி; விளரி: தாரம் என்பன, ஏழிசைகளைக் குறித்து வழங்கிய பழைய தமிழ்ப் பெயர்கள், இளங்கோவடிகள் காலத்தில் வழங்கிய செம்முறைக் கேள்வி' என்னும் சகோட யாழிலே, உழை முதல் கைக் கிளை ஈருகப் பதின்ைகு நரம்புகள் கட்டப்பட்டிருந்தன. அவை, | Gada சமன் வலிவு |-బ్రిటి| கு,து.கை.உ.இ.வி.தா. | கு.து.கை, |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/30&oldid=745082" இலிருந்து மீள்விக்கப்பட்டது