பக்கம்:இசைத்தமிழ்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 உரிய ஓசையாகக் கொண்டனவாதலின், அவை இரண்டும் தம்முள் ஒப்பன. பண்டைத் தாரமும் பிற்காலத்துக் காந் தாரமும் ஆட்டின் ஒலியைத் தமக்குரிய ஒசையாகக் கொண் டன. ஆதலின், அவை இரண்டும் தம்முள் ஒப்பன. அவ்வாறே பண்டைக் கைக்கிளையும் பிற்காலத்துத் தைவத மும் குதிரையின் ஒலியைத் தமக்குரிய ஓசையாகக் கொண் டன. ஆதலின்,அவை இரண்டும் தம்முள் ஒப்பன. ஷட்ஜம் என்பது, ஏழிசைகளுள் ஏனைய ஆறும் பிறத்தற்கு இடமாயது என்னும் பொருளில் வழங்கும் காரணப் பெயர். இவ்வாறே இளி என்னும் இசையும் எல்லாப் பண்ணிற்கும் அடிமனை யாதலின் பட்டடை என்னும் பெயரினைப் பெற்றது என்ருர் அடியார்க்கு நல்லார். எனவே, பண்டை இளியும், பிற்காலத்து ஷட்ஜமும் ஒன்றே என்பது புலம்ை. மேற் குறித்த ஐந்தினையும் அடைவே நிறுத்தியபின் எஞ்சி நின்ற குரலும் துத்தமும் பிற்காலத்தாரால் முறையே மத்திம பஞ்சமங்களாக வழங்கப்பட்டன என்பது தெளிவாகின்றது என்பர் யாழ் நூலாசிரியர். (யாழ் நூல் - பக்கம் 4, 5 இம் முடிவு ஏழிசைகளுக்குச் சொல்லப்பட்ட ஒசை யொப்புமையால் மட்டுமின்றிப் பண்டைத் தமிழ் நூல் களிலும் இவ்வேழிசைகளுக்கு வகுத்து உரைக்கப்படும் அலகு நிலைகளாகிய சுருதிப் பகுப்பாலும் உறுதிப்படும் என்பதனை யாழ்நூலில் அடிகளார் நன்கு புலப்படுத்தி யுள்ளார்கள். ஏழிசைகளிலும் அமைந்துள்ள சுருதிகளின் தொகை இருபத்திரண்டு என்பது இசையாசிரியர் அனைவர்க்கும் உடன்பாடான கொள்கையாகும். இச் சுருதி கள் இருபத்திரண்டும் ஏழு தொகைகளாகப் பிரிந்து குரல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/35&oldid=745087" இலிருந்து மீள்விக்கப்பட்டது