பக்கம்:இசைத்தமிழ்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 இளிக்கிரமம் விளரியும் கைக்கிளேயும் தாரக்கிரமத்திற் போலவே முறையே கற்கடகத்திலும் கும்பத்திலும் நிற்க, மற்ற ஐந்தும் தாரக் கிரமத்தில் நின்ற இடத்திலிருந்து ஒரு வீடு தள்ளி நிற்பது இளிக்கிரம மாகும. அங்ங்னமாதலின் இளி மிதுனத்திலும், தாரம் கன்னியிலும், குரல் விருச்சிகத்திலும், துத்தம் மகாத்திலும், உழை மேடத்திலும் நிற்பன என்பது பெறப்பட்டது. இவற்றைப் பின்வருமாறு இராசி வீட்டில் நிறுத்தலாம். t மீனம் மேடம் இடபம் மிதுனம் - | உ | - இ i } l : --------------- கும்பம் | கடகம் கைக்கிளே ! வி ! —— t மகரம் சிங்கம் துத்தம் ! | - தி இ, விருச்சிகம் துலாம், கன்னி - குரல் .مصممممسم தாரம் | அந்தரங்களாகிய மீனம் இடபம் சிங்கம் துலாம் தனு என்பன, வெற்றிடமாக விடப்பட்டன. இவை, முன்பு தாரக் கிரமத்திலே நரம்பு நின்ற இடங்கள். இவற்றுள் இளி நரம்பு, இடபமிதுனத்திலுள்ள நான்கு சுருதியைப் பெறுகின் றது. விளரி, கடகத்திலுள்ள மூன்று சுருதியைப் பெறுகின் றது. தாரம் சிங்கம் கன்னியிலுள்ள இரண்டு சுருதியைப் பெறுகின்றது. குரல் நரம்பு, துலாம் விருச்சிகத்திலுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/40&oldid=745092" இலிருந்து மீள்விக்கப்பட்டது