பக்கம்:இசைத்தமிழ்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 என்பது தெளிவாகிறது (யாழ் நூல் சுஅ) என்பர் யாழ் நூலாசிரியர். சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையிற் கூறிய தாரத் தாக்கம், இளிக் கிரமத்திற்கு உரியது என்பதும், இளிக் கிரமத்து இசைக் கிரியைகளும் முடிபுகளுமே இக் காதை யிற் கூறப்பட்டன என்பதும் யாழ் நூலாசிரியர் ஆராய்ந்து கண்ட உண்மையாகும். ஆய்ச்சியர் குரவையினுள்ளே இடை முதுமகள் குரவை யாடும் மகளிர் எழுவர்க்கும் படைத்துக் கோட் பெயரிடு வாளாய்க் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி. தாரம் என ஏழிசைகளின் பெயரிட்டு, குரற்பெயரினளை "மாயவன்' எனவும்,இளிப்பெயரினளைப் பலதேவன் எனவும், துத்தப் பெயரினளைப் பின்னைப் பிராட்டி எனவும் நிறுத்தி ளுள் என்றும், குாற்பெயரினள், தன் கிளையாகிய இளிப் பெயரினளை நோக்கி, "யாம் முல்லைத் தீம்பாணி பாடுதும்' என்ருள் எனவு இளங்கோவடிகள் குறித்துள்ளார். 'மாயவன் என்ருள் குரலே விறல் வெள்ளே யாயவ னென்ருள் இளிதன்னே - ஆய்மகள் பின்னேயா மென்ருளோர் துத்தத்தை மற்றை யார் முன்னேயா மென்ருள் முறை” "மாயவன் சீருளார் பிஞ்ஞையுந் தாரமும் வால்வெள்ளே சீரார் உழையும் விளரியும் கைக்கிளே பிஞ்ஞை யிடத்தாள் வலத்துளாள் முத்தைக்கு நல்விளரி தான்' என வரும் ஆய்ச்சியர் குரவைப் பகுதிக்கு 'மாயவன் என்ருள் குரலை; மற்றை வெள்ளையாயவன் என்ருள் இளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/42&oldid=745094" இலிருந்து மீள்விக்கப்பட்டது