பக்கம்:இசைத்தமிழ்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 கத் தோன்றும் அந்தரச் செவ்வழி, அந்தரவிளரி, அந்தரப் படுமலை, அந்தரக்கோடி, அந்தரச்செம்பாலே என்னும் ஐந்து சிறு பாலைகளும் ஆகப் பன்னிரண்டு சுரக்கோவைத் தொடர் நிலைகளைப் பண்டைத்தமிழ் மக்கள் கண்டுணர்ந்தனர். பன் னிரு பாலைகள் எனப்படும் இவற்றின் அடியாகப் பல்வேறு பண்களைத் தோற்றுவித்து இசைவளர்த்தார்கள். இந்நுட்பம் சிலப்பதிகாரத்தாலும் அதன் உரைகளாலும் அறியப்படும். பழந்தமிழர் கண்டுணர்த்திய பன்னிரு பாலைகளைத் தாரக்கிரமம், குரற்கிரமம், இளிக்கி மம் முதலிய எல்லாக் கிரமங்களிலும் இசைக்கலாம் கிரகசுரம் மாற்றுதல் என் னும் பாலைத்திரிபினுல் பல்வேறு பண்கள் தோன்றுவன என்பதும், தமிழ்ப் பண்கள் நூற்றுமூன்றும் ஏழ்பெரும்பாலை ஐஞ்சிறு பாலை யாகிய இப் பன்னிரு பாலைகளிலிருந்தே தோன்றின என்பதும். 'பன்னிருபாலையின் உரு, தொண்ணுாற்ருென்றும் பன்னிரண்டுமாய்ப் பண்கள் நூற்று முன்ருதற்குக் காரணமாம் எனக்கொள்க’ என அரும் பதவுரையாசிரியரும், 'இவ்வேழு பெரும்பாலையினையும் முதலடுத்து நூற்று மூன்று பண்ணும் பிறக்கும்" என அடியார்க்கு நல்லாரும் கூறுதலால் நன்கு விளங்கும். சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதையில் இசைப் பாட்டினைப் பாடித்தரும் கவிஞனது இயல்பினை விரித் துரைக்குமிடத்து, 'இசைப்புலவன் ஆளத்திவைத்த பண்ணிர் மையை முதலும் முடிவும் நிறையும் குறையும் கிழமையும் என வும், அரும்பாலேயினத் திரசங்கராபரணம் எனவும், கேரடிப்பாலையினேக் கரகரப்பிரியா எனவும், விளரிப் பாலேயினே அநுமத்தோடி எனவும் கொள்வர் யாழ் நூலார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/46&oldid=745098" இலிருந்து மீள்விக்கப்பட்டது