பக்கம்:இசைத்தமிழ்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莓建 மந்தரம், தாரம் என வழங்கும் வடநூற் குறியீடுகளோடு ஒத்தனவாகக் கொள்ளலாம். சமன் என்பது சமசுரங்களைக் குறிக்கும். முறை என்பது இசைச் சுரங்கள் பயின்றுவரும் முறையைக் குறிக்கும். வரையறையென்பது, ஒருபண் வேருெரு பண்ணுேடு மயங்காமற் காத்தற்குக் கூறும் இலக்கணம். நீர்மை என்பது, சொல்லாற் கூறமுடியாமல் உய்த்துணர்வால் உணர்ந்து கொள்ளத்தக்க இராகபாவம் போன்ற பண்ணிர்மையைக் குறிக்கும் பண்களுக்கு உரியன வாக அடியார்க்கு நல்லார் குறித்த பதினுேரிலக்கணங் களுள் வரையறையும் நீர்மையும் நீங்கலாக எஞ்சிய ஒன்பதும் திருஞான சம்பந்தர் காலத்தில் இசைத் தமிழ்ப் பண்களுக்குரிய இலக்கணங்களாகக் கொள்ளப்பட்டன எனத் தெரிகிறது. இவை ஒன்பதினையும், எண் ணிடை யொன்றினர் இரண்டினர் உருவம் எரியிடை மூன்றினர் நான் மறையாளர் மண்ணிடை ஐந்தினர் ஆறினர் அங்கம் வகுத்தனர் ஏழிசை எட்டிருங்கலே சேர் பண்ணிடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர் பாடிநின் ற டிதொழ மதனனே வெகுண்ட கண் ணிடைக் கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினைய நம் வினைகரி சறுமே. என்னும் திருக்கழுமலத் திருப்பதிகத்திலே பண்ணிடை ஒன்பதும் என ஆளுடையபிள்ளையார் குறிப்பிட்டுள்ளமை காணலாம் மேற்காட்டிய திருப்பாடலில் ஏழிசை எட்டிருங் கலைசேர்பண்’ என்றமையால் இணை கிளை, பகை, நட்பு என் னும் நான்கினையும் ஆராய்ந்து இசையுணருங் குறிநிலையெய்த நோக்கி, ஏழிசையினையும் பாலையாக நிறுத்தியபின், எடுத் தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/48&oldid=745100" இலிருந்து மீள்விக்கப்பட்டது