பக்கம்:இசைத்தமிழ்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தானங்களிலும் அமைத்துப் பாடுங்காலத்து அப்பண்ணுனது மூவேழு (இருபத்தொரு இசைத்துறைகளாக விளங்கித் தோன்றும். இவ்வாறு ஒரு பண்ணின் சாயல் அனைத்தும் தெளிவாகப் புலப்படும் முறையில் அதனை மூன்று தானங் களிலும் வைத்து இருபத்தொரு துறைகளாக இசைத்துக் காட்டும் நோக்கத்துடன் இருபத்தொரு நரம்புகள் கட்டப் பெற்ற யாழ்க்கருவி பேரியாழ் என்பதாகும். இந்நுட்பம் 'முவேழ் துறையும் என மேற்காட்டிய தொடர்க்கு அன்றி இருபத்தொரு நரம்பால் தொடுக்கப்படும் பேரியாழ் எனி னும் அமையும்', எனப் பழைய உரையாசிரியர் கூறிய மற்ருெரு விளக்கத்தால் உய்த்துணரப்படும். மேலே குறித்த வண்ணம் ஒவ்வொரு பண்ணிற்கும் உரிய முழு அமைப்பினையும் விரித்து விளக்கும் முறையில் இருபத்தொரு இசைத்துறைகளையும் குழல் யாழ் முதலிய இசைக்கருவிகளில் இசைத்துக் காட்டவல்ல இசையாளர் பலர் பண்டைநாளில் தமிழகத்தில் வாழ்ந்திருந்தனர். இச்செய்தி, "குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும் வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும் அரும்பெறல் மரபிற் பெரும்பாண் இருக்கையும்' (இந்திர, 35-7) எனவரும் சிலப்பதிகாரத் தொடராலும்,

  • துளைக் கருவியானும் நரம்புக் கருவியானும் குரல் முதலாயுள்ள ஏழிசையினும் சரிகம பதநி என்னும் ஏழெழுத் தினையும் மூவகை வங்கியத்தினும் நால்வகை யாழினும் பிறக்கும் பண்களுக்கு இன்றியமையாத மூவெழு திறத் தையும் இசைத்துக் காட்டவல்ல பெறுதற்கரிய இசை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/55&oldid=745108" இலிருந்து மீள்விக்கப்பட்டது