பக்கம்:இசைத்தமிழ்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#9 மரபை யறிந்த குழலர் பாணர் முதலிய இசைக்காரர் இருக்குமிடங்களும்" என அடியார்க்கு நல்லார் இத் தொடர்க்கு எழுதிய உரையாலும் நன்கு புலம்ை. இவ்வாறே, 'இசைபெறு திருவின் வேத்தவை மேற்பத் துறை பல முற்றிய பைதிர் பாணரொடு’ (டிஆல்படு-39, 40) என்ற தொடர், ஒவ்வொரு பண்ணும் முவகைத் தானத்தும் பல துறைகளிலும் இசைக்கப்பெறும் என்ற நுட்பத்தை இனிது விளக்குதல் காணலாம். மேலே குறித்தவண்ணம் ஒவ்வொரு பண்ணையும் இருபத்தொரு இசைத் துறைகளிற் பாடிமுடிக்கும் இசை முறை ஆளுடையபிள்ளையார் காலத்திலும் வழக்கில் இருந்தது. இவ்விசைத் துறைகளையெல்லாம் இசைத்துக் காட்டத் தக்கவாறு திருஞானசம்பந்தர் பாடியருளிய இயலிசைத் திருப்பதிகங்கள் அமைந்திருந்தன. இச்செய்தி, கஞ்சத்தே னு,ண்டிட்டே களித்துவண்டு சண்பகக் கானே தேனே போராருங் கழுமல நகரிறையைக் தஞ்சைச்சார் சண்பபைக்கோன் சமைத்த நற்கலேத்துறை தாமே போல்வார் தேனேரார் தமிழ் விரகன மொழிகள் எஞ்சத் தேய் வின்றிக்கே யிமைத்திசைத் தமைத்தகொண் டேழே யேழே காலேமூன் றியலிசை யிசை யியல்பா வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர் மார்பே சேர்வாள் வானுேர்சீர் மதிநுதல் மடவரலே. (1—126–11) எனவரும் திருக்கடைக்கப்பால் இனிது விளங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/56&oldid=745109" இலிருந்து மீள்விக்கப்பட்டது