பக்கம்:இசைத்தமிழ்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 பெயரும் பண்ணிள் பெயரும் இசை வகுத்தார் பெயரும் குறிக்கப்பெற்றுள்ளன. பரிபாடலுக்கு இசை வகுத்தவர் கள் நாகளுர், பெட்டனகளுர், நந்நாகனர், நன்னகளுர், கண்ணளுகளுர் என்னும் பெயருடைய இசையாசிரியர்களா வர். கேசவளுள் நல்லச்சுதனுர் என்போர் தாம் இயற்றிய பாடலுக்குத் தாமே இசை வகுத்தோராகக் குறிக்கப்பெற் றுள்ளனர். இங்ங்ணம் பரிபாடலுக்கு வகுக்கப்பெற்ற இசை யமைப்பு ஏதேனும் ஒருமுறைபற்றி எழுதப்பெற்றிருத்தல் வேண்டும். அம்முறையும் முறைபற்றிய இசைக்குறிப்பும் இப்பொழுது நமக்குக்கிடைக்கவில்லை, கடைச்சங்க காலத்திற்குப் பின் கி. பி. ஐந்தாம் நூற்ருண்டினை யொட்டித் தோன்றிய காரைக்காலம்மையார் திருவாய் மலர்ந்தருளிய திருவாலங்காட்டு முத்த திருப்பதி கங்கள் இரண்டும் முறையே ைநவள (நட்ட பாடை)ப் பண்ணிலும் இந்தளப் பண்ணிலும் பாடப்பெற்ற இன்னி சைத் திருப்பதிகங்களாகும். நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் நன்ளுேக்கத் துடன் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாருரர் ஆகிய மூவரும் எல்லாம்வல்ல இறைவனை இன்னிசையாற் பரவிப்போற்றிய செந்தமிழ்ப் பாடல்களே தேவாரம் ஆகும். தேவாரத் திருப்பதிகங்களைத் திருவாய் மலர்ந்தருளிய பெருமக்கள் மூவரும், கலைக்கெலாம் பொருளாய் விளங்கும் கண்ணுதற் கடவுள் திருவருளால் இயலிசைத் தமிழ்வளர்த்த அருளாசிரியர்களாவர். அவர்கள் இத்திருப்பதிகங்களைத் திருவாய் மலர்ந்தருளும் போதே இன்னிசையுடன் பாடிப் போற்றினர்கள். இச்செய்தி, அன்னேர் அருளிய திருப்பதி கங்களாலும் அவர்தம் வரலாற்றுநிகழ்ச்சிகளை விளக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/58&oldid=745111" இலிருந்து மீள்விக்கப்பட்டது