பக்கம்:இசைத்தமிழ்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 முறையில் நம்பியாண்டார்நம்பி, சேக்கிழாரடிகள் முதலிய பெருமக்கள் கூறிய அரிய குறிப்புக்களாலும் இனிது விளங்கும். இசைப்பாடல்கள் இருவகைப்படும் இயற் புலவன் பாடும் பொழுதே இசையுடன் பாடப்பெற்றன. ஒருவகை; புலவர்களால் முதற்கண் சுத்தாங்கமாகப் பாடப்பெற்றுப் பின்னர் இசைவல்லாரால் இசையமைக்கப் பெற்றன மற்ருெருவகை. தேவார ஆசிரியர் மூவரும் அருளிய திருப் பதிகங்கள், அப்பெருமக்கள் திருவாயிலிருந்து வெளிவரும் பொழுதே பண்ணுர் இன்தமிழாய் வெளிப்பட்ட இன்னிசைப் பாடல்களாகும். இப்பதிகங்களைப் பண் சுமந்த பாடல்” எனப்போற்றுவர் சான்ருேர். திருஞானசம்பந்தப் பிள்ளையார், தாம்பாடிய திருப் பதிகங்கள் இனிய பண்ணமைந்த இசைத்தமிழ்ப் பாடல்கள் என்பதனை 'ஏழேயேழே நாலேமூன்றியலிசை யிசையியல்பா' (1-126-1} எனவும், ஏழின்னிசை மாலை (2-37-11) எனவும், பண்பொலி செந்தமிழ்மாலை (2-48-11) எனவும், 'சந்தமிவை தண்டமிழின் இன்னிசையெனப் பரவு பாடல்: (3-76-11 எனவும் வரும் தொடர்களில் தெளிவாகக் குறித்துள்ளார். ஆளுடைய பிள்ளையார் நாளும் இன்னிசை யால் செந்தமிழ் வளர்த்த சிறப்பினையும் அவர் மேற் கொண்ட இசைத் தமிழ்த் தொண்டு இனிது நிகழும் வண்ணம் இறைவன் திருக்கோலக்காவில் பிள்ளையாருக்குப் 1. “பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்' திருவர்சகம் - திருவம்மானை 8.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/59&oldid=745112" இலிருந்து மீள்விக்கப்பட்டது