பக்கம்:இசைத்தமிழ்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6i. பதிப்புரை உலகமெலாங் களிகூர ஒளிர்தமிழி னியல்வளர இலகுதமி ழிசை வழக்கே எம்மருங்கும் வளர்ந்தோங்கப் புலவருளங் களிகூர யாழ்நூல்செய் புலவர் பிரான் மலரடியென் சென்னியினு மனத்தகத்தும் மலர்ந்துள்வால். (பல்கலைக் கழகத்திற் பயிலும் தமிழ் மாணவர்கள் பண்டைத் தமிழர் வளர்த்த இசைத்தமிழ்த் திறங்களை நன்குணர்ந்து, தென்னுட்டு இசைக்கலை வளர்ச்சியில் பற்றுடையராய்ப் புலமை பெறுதல்வேண்டும் என்னும் நோக்கத்துடன் எழுதப்பெற்றது இசைத் தமிழ் என்னும் இந்நூலாகும். இத்தகைய தமிழ்ப் பணிகளில் எனக்கு ஊக்கமும் ஆக்கமும் உதவி ஆதரித்துவரும் அண்ணுமலைப் பல்கலைக் கழக இணைவேந்தர். செட்டிநாட்டரசர் ராஜா சர், டாக்டர். முத்தைய செட்டியார் அவர்களுக்கும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நீதிபதி. உயர்திரு. வ. சொ. சோமசுந்தரம் அவர்களுக்கும் எனது பணிவார்ந்த நன்றியினை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன். உலக புருடனுக்கு நெஞ்சத் தாமரையாகத் திகழும் தில்லைப்பதியிலே, கலேயிலும் இளைஞர்கள் திருந்து கல்வி யும் தெய்வங் கொள்கையும் பொருந்திய நன்னெஞ்சத் தினராய் வளம்பெற்று வளர, இராமகிருட்டிண வித்தியா சாலையை நிறுவிய வள்ளல் தருமபூஷணம். செ. இரத்தின சாமிச் செட்டியார் அவர்களாவர். தில்லைப் பெருங்கோயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/6&oldid=745113" இலிருந்து மீள்விக்கப்பட்டது