பக்கம்:இசைத்தமிழ்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 என்பது சுந்தரர் பாடிய திருப்பாடல். இது திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய பெருமக்கள் இருவரது இசைத்தமிழ்த் திறத்தையும் அன்னேர் பாடியருளிய தெய்வத் தமிழ் இசையில் தோய்ந்து மகிழ்ந்த சுந்தாரது இசைத் தமிழ்ஆற்றலையும் இனிது புலப்படுத்துவதாகும். ? தேவாரம் என்னும் பெயர் வழக்கு மூவர் திருப்பதிகங்களைத் தேவாரம் என வழங்கும் வழக்கம் இரட்டைப் புலவர்கள் பாடிய ஏகாம்பர நாதருலா வில்தான் முதன்முதற் காணப்படுகின்றது. 'மூவாதபே ரன்பின் மூவர் முதலிகளும் தேவாரஞ்செய்த திருப்பாட்டும்” என்பது அவ்வுலாவிலுள்ள தொடராகும். இத்தொடரில் தேவாரஞ் செய்த திருப்பாட்டு என்புழித் தேவாரம் எனப் பெயர் நிலையில் வைத்துரையாமல் தேவாரஞ் செய்த என வினைநிலையில் வைத்துரைத்தலால் 'திருப்பாட்டு’ என்பது மூவர் பாடிய திருப்பாடல்களையும் தேவாரஞ் செய்த என்பது அத்திருப்பாடல்களை இசைப்படுத்திப் பாடிய-எனத் தொழில் நிலையையும் குறித்து நின்றன எனக் கொள்ள வேண்டியுளது. மூவர் திருப்பதிகங்களையும் தேவாரம் என்ற பெயரால் முதன்முதல் தெளிவாகக் குறிப்பிட்டு வழங்கியவர் சைவ எல்லப்ப நாவலராவர். இவர், தாம் பாடிய திருவருணைக் கலம்பகத்தில் சைவசமய குரவர் நால்வரையும் போற்றும் காப்புச் செய்யுளில் .வாய்மை வைத்த சீர்த்திருத்தேவார மும் திருவாசகமும், உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்ருள் எம் உயிர்த்துணையே” எனப்பாடிப் பரவுகின்ருர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/64&oldid=745118" இலிருந்து மீள்விக்கப்பட்டது