பக்கம்:இசைத்தமிழ்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 திருப்பதிகங்களையும் தேவாரம் என்ற பெயரால் முதன் முதல் வழங்கியுள்ளார்கள் 1, 12-ஆம் நூற்ருண்டுகளில் வரையப் பெற்ற சோழ வேந்தர் கல்வெட்டுக்களில் தேவாரம் என்ற சொல் வழிபாடு என்ற பொருளில் வழங்கப் பெற்றுள்ளது. மூவர் திருப்பதிகங்களும் இறை வழிபாட் டிற் பாடப் பெற்று வந்தமை பற்றிக் கி. பி பதினன்காம் நூற்ருண்டு முதல் அப்பதிகங்கள் தேவாரம் என்ற பெயரால் வழங்கப்பெற்று வருகின்றன. வென்றும் அதற்குமுன் அப் பதிகங்கள் தேவாரம் என்ற பெயரால் வழங்கப்பட்டு வந்தனவென்பதற்குக் கல்வெட்டுக்களிலோ அன்றி இலக் கியங்களிலோ சான்றுகள் கிடைக்கவில்லை யென்றும் திருவாளர். தி. வை. சதாசிவ பண்டாரத்தாரவர்கள் ஆராய்ந்தெழுதிய தேவாரமென்னும் பெயர் வழக்கு என்ற தலைப்புடைய கட்டுரையில் தெளிவாக விளக்கி யுள்ளார்கள். அவர்கள் எடுத்துக்காட்டியபடி தேவாரம் என்ற பெயர் சோழர் கல்வெட்டுக்களில்தான் முதன் முதல் காணப்படுகின்றது. கி. பி. பதினுெராம் நூற்ருண்டுக்கு முன் தேவாரம் என்ற சொல் வழிபாடு என்னும் பொருளில் வழங்கியதென்பதற்கு இலக்கியச் சான்ருே கல்வெட் டாதரவோ கிடைக்கவில்லை. எனவே தேவாரமென்ற சொல் சோழமன்ன ராட்சிக் காலத்து வழிபாடென்னும் பொருளில் வழங்கப் பெறுதற்குரிய காரணம் யாது என ஆராய்தல் இன்றியமையாததாகும். தே என்பது தெய்வம் என்னும் பொருளேக் குறித்து வழங்கும் ஒரெழுத் தொருமொழி. வாரம் என்பது இசையின் கூறுபாட்டினைக் குறித்து வழங்குந் தமிழ்ச்சொல். வாரமா 1 செந்தமிழ் 45-ம் தொகுதி பக்கம் 121-128.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/66&oldid=745120" இலிருந்து மீள்விக்கப்பட்டது