பக்கம்:இசைத்தமிழ்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ó13 பொருளுமாகிய உலகியற்பொருள்களின் இயற்கையழகினை யும் அவற்றின் உடனுய் விளங்குந் தெய்வ அழகினையும் பொருளாகக் கொண்டு பாடப்பெறுவனவாயின. இசையில் வல்ல பாணர் முதலிய கலைச்செல்வர் தம் இசைத்திறத்தை அவையின்கண் புலப்படுத்தும்பொழுதெல்லாம் இசைப்பாட லுக்குச் சிறப்புடைப்பொருளாய் விளங்கும் முழுமுதற் பொருளைப் போற்றும் தெய்வப்பாடலையே முதன்மையாகப் பாடுவது வழக்கம். பண்டை நாளில் வாழ்ந்த பாணர் முதலியோர் இம்முறையினைத் தொன்றுதொட்டு வரும் இசைமரபாகக் கொண்டு போற்றுதலைத் தமது முதற் கடமையாகக் கடைப்பிடித்து வந்துள்ளனர். இச் செய்தி யினைப் பத்துப்பாட்டுள் ஒன்ருகிய மலைபடுகடாத்துள், மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ் நரம்புமீ திறவா துடன் புணர்ந் தொன்றிக் கடவ தறிந்த இன் குரல் விறலியர் தொன்றெழுகு மரபிற் நம்மியல்பு வழா அது அருந்திறற் கடவுட் பழிச்சிய பின்றை விருந்திற் பாணி கழிப்பி' (534-39] எனவரும் அடிகளிற் பெருங்குன்றுார்ப் பெருங்கெளசிகனர் தெளிவாக விளக்கியுள்ளமை காணலாம். 'வாரம் பாடுதல் என்பது, இசைப்பாடலாற் கடவுளைப் போற்றி வழிபடுதல் என்ற பொருளில் கடைச் சங்க காலத்தே வழங்கி வந்ததாகத் தெரிகிறது. சிலப்பதிகார அரங்கேற்று காதையிலே, " தொன்னெறி யியற்கைத் தோரிய மகளிரும் சிரியல் பொலிய நீரல் நீங்க வாரம் இரண்டும் வரிசையிற்பாட”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/68&oldid=745122" இலிருந்து மீள்விக்கப்பட்டது