பக்கம்:இசைத்தமிழ்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 எனவரும் தொடர்க்கு ஆடிமுதிர்ந்தாராகிய மகளிர் நன்மையுண்டாகவும் தீமை நீங்கவும் வேண்டித் தெய்வப் பாடல் பாட” என அரும்பதவுரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் பொருள் கூறியுள்ளார்கள். எனவே இத்தொட ரில் வந்த வாரம் என்ற சொல் தெய்வப்பாடல் என்ற பொருளில் இளங்கோவடிகளால் ஆளப்பட்டதென்பது நன்கு பெறப்படும். அன்றியும் சிலப்பதிகாரத்திற் கடலாடுகாதை யில் திருமாலைப்பாடும் தேவபாணியும் இறைவனைப் போற்றும் தேவபாணியும் வருணப்பூதர் நால்வரையும் பரவும் நால்வகைத் தேவபாணியும் ஞாயிறு திங்கள் என் னுந் தெய்வத்தைப் பரவிய தேவபாணியும் கூத்தின்கண் பாடுதற்குரிய இசைப்பாடல்களாகக் கொள்ளப்பட்டன என இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். பாணி யென்பது பண்ளுேடு கூடிய இசைப்பாட்டு. தெய்வத்தைப் பண் பொருந்தப் போற்றிப் பாடிய இசைப்பாடல் தேவபாணி யெனப் பெயர் பெறுவதாயிற்று. “தேவபாணி முதலாக அரங்கொழிசெய்யுள் ஈருக வுள்ள செந்துறை விகற்பங்களெல்லாம் புறநாடகங்களுக் குரிய உருவாவன” என அடியார்க்கு நல்லார் கூறுவர். தெய்வத்தை முன்னிலையில் வைத்துப் பரவிய பாடலே தேவபாணியென வழங்கும் சிறப்புடையதாகும். இதனை 'ஏனேயொன்றே தேவர்ப் பராஅய முன்னிலேக் கண்னே’’ என்ற செய்யுளியற் சூத்திரத்தில் ஒத்தாழிசைக் கலியின் வகையாகத் தொல்காப்பியர் குறிப்பிடுவர். ஒத்தாழிசைக் கலி முன்னிலையிடமாகத் தேவரைப் பராவும் பொருண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/69&oldid=745123" இலிருந்து மீள்விக்கப்பட்டது