பக்கம்:இசைத்தமிழ்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 குறிக்கப்பட்டுள்ளது. மூன்ரும் இராசேந்திர சோழனது 4-ஆம் ஆட்சியாண்டில் முன்னியூரில் வரையப்பெற்ற கல் வெட்டில் திருத்தோணிபுரமுடையநாயனர் கோயிலையடுத்து 'திருமுறைத் தேவாரச் செல்வன் குகை' என ஒரு திரு மடம் இருந்தமை குறிக்கப்பட்டுளது. திருமுறையாகிய தேவாரம் என்ற பொருளிலேயே இத்தொடர்கள் இயைத் துரைக்கப் பெற்று வழங்கியிருத்தல் வேண்டும். இதல்ை இரண்டாம் இராசராச சோழன்காலத்தில் தேவாரம் என்ற சொல் திருமுறையாகிய இசைப்பாடலையே குறித்து வழங் கியதென்பது நன்கு புலளுதல் காணலாம். கி பி. 13-ம் நூற்ருண்டில் வாழ்ந்த வடநாட்டு இசைநூலாசிரியரான சாரங்க தேவரென் பார் தாம் இயற்றிய 'சங்கீத ரத்னகரம்' என்ற வடமொழி இசை நூலில், முவர் திருப்பதிகங்களிற் காணப்படும் தமிழ்ப்பண்கள் சிலவற்றைத் தேவார வர்த்தநீ, என்னும் அடை மொழியுடன் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப் பினை ஊன்றி நோக்குங்கால் அவ்வாசிரியர் வாழ்ந்த காலமாகிய கி. பி. 13-ம் நூற்ருண்டிற்கு முன்பே மூவர் திருப்பதிகங்களும் தேவாரம் என்ற பெயராற் சிறப்பித்து வழங்கப்பெற்றன என்பது தெளிவாகத் தெரிகின்றது. தேவபாணி யென்றற்போலத் தெய்வத்தைப் பரவும் இசைப்பாடல் என்ற பொருளில் வழங்கியதே தேவார மென்னும் பெயரென்பதும், இறைவனைப் பண்ளுர்ந்த இசையாற் பாடிப் போற்றுதற்கேற்ப அமைந்தவை முவர் திருப்பதிகங்களாதலின் இவை தேவாரம் என வழங்கப் பெற்றன வென்பதும், தெய்வ இசைப் பாடல்களாகிய இவை இறைவழிபாட்டிற்கு இன்றியமையாச் சாதனமாக அமைந்தமை கருதி இவற்றுக்கு வழங்கிய தேவாரமென்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/73&oldid=745128" இலிருந்து மீள்விக்கப்பட்டது